சேரகுல வேளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாளர் சாதியின் ஒரு சிறிய உட்பிரிவே சேரகுல வேளாளர் ஆகும். இவர்கள் பிள்ளை பட்டத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளாளர்கள் தாங்கள் வசிக்கும் இடம், தொழில் இவற்றை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர். அதன்படி கரூர், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பாலக்காடு என சேரன் ஆண்ட பகுதியில் வசிக்கும் வெள்ளாளர் சேரகுல வேளாளர் என அழைக்கப்படுகிறார்கள்.

சேரமான் பெருமாள் நாயனார்[தொகு]

சேரகுல வேளாளர்களுக்கு சேரமான் பெருமான் ஒரு குலகுருவாக இருக்கிறார். சேரமான் பெருமாள் நாயனாரின் சிலை கோவை, பேரூர் கோவிலில் அமையப்பெற்றுள்ளது. பேரூரில் வருடந்தோறும் (ஆடி-சுவாதி யில்) குரு பூசை வழிபாடும், பேரவைக் கூட்டமும் நடந்து வருகிறது. இதனை தமிழ்நாடு சேரகுல வேளாளர் சங்கம் சிறப்பாகச் செய்து வருகிறது.

வாழும் பகுதிகள்[தொகு]

சேரகுல வேளாளர் சமுதாய மக்கள் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் குறிப்பிடத்தக்களவில் வாழ்கின்றனர்.

கோவையில் சிங்காநல்லூர், குறிச்சி, சுந்தராபுரம், வெள்ளலூர், பேரூர், செல்வபுரம் போன்ற பகுதிகளிலும் பொள்ளாச்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர், ஆனைமலை பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டையிலும் வாழ்ந்து வருகின்றனர். சிலர் பழனியில் வாழ்ந்து வருகிறார்கள்.

கேரளாவில் பாலக்காடு, இடுக்கி மற்றும் மூணாறு பகுதிகளில் குறைந்த அளவில் வசித்து வருகிறார்கள்.

சமூக, பொருளாதார நிலை[தொகு]

சேரகுல வேளாளப் பெருமக்கள் ஆராய்ச்சியாளராக, கல்வியாளராக, நில உடைமையாளராக, கணக்காளராக, நில அளவையராக, தொழில் முனைவோராக அரசியலிலும் இருந்து வருகின்றனர். குறைந்த மக்கள் தொகை இருப்பினும் இவர்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளனர்.

மடங்கள்[தொகு]

சேரகுல வேளாளர்களின் சத்திரம்/மடம், பழனி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர் மற்றும் குறிச்சியில் உள்ளது. இங்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளது.

திருமணம்[தொகு]

சேரகுல வேளாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள், பிள்ளை பட்டத்தினுடைய மற்ற உட்பிரிவுகளான சோழிய, பாண்டிய வேளாளர்களுடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரகுல_வேளாளர்&oldid=3624084" இருந்து மீள்விக்கப்பட்டது