சேம்சு கேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேம்சு கேயர் (James W. Gair, டிசம்பர் 27, 1927 – டிசம்பர் 10, 2016)[1] ஒரு தென்னாசிய மொழியியற் பேராசிரியர். இவர் சிங்கள மொழி, பாளி மொழி, தமிழ் மொழி, திவேகி (Dhivehi) மொழி ஆகியவற்றில் மொழியியல் சார்பான சிறப்பறிவு பெற்றவராகக் கருதப்படுகின்றவர்.[2] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் மாநிலத்தில், இத்தாக்காவில் (Ithaca) உள்ள கார்ணெல் பல்கலைக்கழகத்தில் தற்கால மொழிகள், மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். தனது 89 ஆவது பிறந்த நாளுக்கு முன்பாகவே இவர் இறந்தார்.[2] இவர் இத்துறைகளில் எழுதியுள்ள நூல்களைக் கீழே காணலாம்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • Gordon H. Fairbanks, James W. Gair, M. W. DeSilva. Colloquial Sinhalese. Volumes 1 and 2. Ithaca, NY: South Asia Programm, Cornell University
  • James W. Gair. Colloquial Sinhalese Clause Structures. ISBN 9027907331
  • James W. Gair, W. S. Karunatillake. A New Course in Reading Pali: Entering the Word of the Buddha. South Asia Books, ISBN 8120814401

மேற்கோள்[தொகு]

  1. "James W. Gair (1927–2016)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் March 25, 2017.
  2. 2.0 2.1 James W. Gair, linguistics professor emeritus, dies at 88 - Cornell University

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_கேயர்&oldid=2743669" இலிருந்து மீள்விக்கப்பட்டது