உள்ளடக்கத்துக்குச் செல்

சேமக்கலம் (ஆற்றல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேமக்கலம் (Accumulator) என்பது மின்சக்தியை ஏற்று, சேமித்து வைத்து பின்னர் அதை தேவைக்கேற்ப வெளியிடும் ஒரு சாதனம் ஆகும். சில சேமக்கலன்கள் நீண்ட கால இடைவெளியில் குறைந்த விகிதத்தில் ஆற்றலை ஏற்றுக்கொள்கின்றன, குறுகிய கால இடைவெளியில் அதிக விகிதத்தில் ஆற்றலை வழங்குகின்றன. சில சேமக்கலன்கள் குறைந்த நேர இடைவெளியில் அதிக விகிதத்தில் ஆற்றலை ஏற்றுக்கொள்கின்றன, நீண்ட கால இடைவெளியில் குறைந்த விகிதத்தில் ஆற்றலை வழங்குகின்றன. சில சேமக்கலன்கள் பொதுவாக ஒப்பிடக்கூடிய விகிதத்தில் ஆற்றலை ஏற்றுக்கொண்டு அவற்றை வெளியிடுகின்றன. சில சாதனங்கள் தாங்கள் பெறும் ஆற்றலை விட வேறுபட்ட வடிவிலான ஆற்றலைச் சேமித்து, உள்ளே செல்லும் போது மற்றும் வெளியேறும் போது ஆற்றலை மாற்றவும் செய்கின்றன.

நீராவி சேமக்கலன்கள், திருகுசுருள்வில்கள், அமன் உருளை ஆற்றல் சேமிப்புகலன்கள், நீரியல் சேமக்கலன்கள், மறுவூட்ட மின்கலன்கள், மின்தேக்கிகள், மின்தூண்டிகள், ஈடுசெய்யப்பட்ட துடிப்பு மின்மாற்றிகள், உந்தப்பட்ட சேமிப்பு நீர் மின்சாரகருவிகள் போன்றவை சேமக்கலனுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இலண்டன் கோபுர பாலம் ஒரு சேமக்கலம் வழியாக இயக்கப்படுகிறது. அசல் உயர்த்தும் பொறிமுறையானது பல நீரியல் சேமகலங்களால் சேமிக்கப்பட்ட அழுத்தப்பட்ட நீரால் இயக்கப்படுகிறது.[1] 1974 ஆம் ஆண்டில், அசல் இயக்க முறைமை பெரும்பாலும் புதிய மின் நீரியல் இயக்க திட்டத்திற்கு மாற்றப்பட்டது.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த கேசுட்டன் பிளாண்டே என்பவர் 1859 ஆம் ஆண்டு முதன் முதலில் காரிய அமில மின்கலத்தைக் கண்டறிந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bridge History". Towerbridge.org.uk. பார்க்கப்பட்ட நாள் 12 April 2015.
  2. Day, Ruby (June 16, 2019). "Rechargeable Battery". Innowiki. Archived from the original on அக்டோபர் 24, 2019. பார்க்கப்பட்ட நாள் October 24, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமக்கலம்_(ஆற்றல்)&oldid=3930294" இலிருந்து மீள்விக்கப்பட்டது