உள்ளடக்கத்துக்குச் செல்

சேபியா வசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேபியா வசீர்
Member of the நியூ ஆம்ப்சையர் House of Representatives
from the பெரிமேக் மாகாணம் district
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 6, 2018
முன்னையவர்திக் பேட்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புSafiya Wazir
1991 (அகவை 32–33)
ஆப்கானித்தான்
இறப்புSafiya Wazir
இளைப்பாறுமிடம்Safiya Wazir
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
பெற்றோர்
  • Safiya Wazir
தொழில்செயற்பாட்டாளர்

சேபியா வசீர் (Safiya Wazir) ஒர் ஆப்கான்-அமெரிக்க சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியாவார். 1991 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். நியூ ஆம்ப்சையர் பிரதிநிதிகள் சபையின் சனநாயக உறுப்பினராக இருந்தார். நியூ ஆம்ப்சையர் மாநில மாளிகையில் பணியாற்றிய முதல் முன்னாள் அகதி வசீர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

தாலிபான் ஆட்சிக்கு முன்னர் ஆப்கானித்தானில் பாக்லான் மாகாணத்தில் வசீர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்தனர்.[1] வசீரின் குடும்பம் இவரது குழந்தை பருவத்தில் 6 வயது ஆகும் போதே நாட்டை விட்டு வெளியேறியது. ஆப்கானித்தானில் தலிபான்கள் வந்தபோது குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைகளால் இவரது குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியது. அவர்கள் நியூ ஆம்ப்சையரின் கான்கார்டுக்கு குடிபெயர்வதற்கு முன்பு உசுபெக்கிசுதானில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தனர்.[2] அங்கு வந்தபோது வசீருக்கு சிறிதளவு ஆங்கிலம் மட்டும் தெரிந்திருந்தது. எனவே அகராதியைப் படித்து ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.[2] இவரது குடும்பத்தினருக்கு ஆங்கில மொழி தெரியாததால் மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை ஆனால் லூத்தரன் அமைப்பிலிருந்து உதவி பெற்று பெரும்பாலும் அரிசியை மட்டுமே சாப்பிட்டனர்.[1]

வசீர் தனது இடைநிலைப் பள்ளி கல்வியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் 20 வயதில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் நியூ ஆம்ப்சையர் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரவு நேர வகுப்புகளை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றினார் மேலும் சமூகக் கல்லூரியில் படித்து வணிகத்தில் பட்டம் பெற்றார்.[2]

பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் வசீர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக ஆப்கானித்தானுக்குத் திரும்பினார். தன்னுடைய கணவுடன் வசீர் மீண்டும் கான்கார்டுக்குத் திரும்பினார்.[3]

தொழில்

[தொகு]

கான்கார்டின் ஐட்சு சமூகத்திற்குள் வசீர் வேலை செய்யத் தொடங்கினார்; ஐட்சு சமூக செயல் திட்டத்தின் இயக்குநராகவும் அதன் தலைமை தொடக்க கொள்கை மன்றத்தின் துணைத் தலைவராகவும் ஆனார். 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வசீரின் நண்பர் இவரை வேலைக்குச் செல்லும்படி பரிந்துரைத்தார். இருப்பினும் கணவரும் பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வரை வசீர் இக்கோரிக்கையை மறுத்தார்.[4] 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நியூ ஆம்ப்சையர் சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்திற்கான போட்டியில் திக் பாட்டனை வென்று சனநாயகக் கட்சியின் முதன்மையான வெற்றிக்கு வழிவகுத்தார் [5]. வசீர் தனது முதன்மையான சமூகச் செயல்பாட்டையும் கல்வி மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கான அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தால் செப்டம்பர் தொடக்கத்தில் வசீர் நான்கு முறை மாநிலப் பிரதிநிதியாகவும் கான்கார்ட் குடியிருப்பாளராகவும் இருந்த திக் பாட்டனை தோற்கடித்தார். இந்த போட்டி தேசிய கவனத்தை ஈர்த்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, நியூ ஆம்ப்சையரின் மாநில இல்லத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இச்சிறப்பைப் பெற்ற முதல் அகதியாக வசீர் ஆனார்.[6]

சம வீட்டு வாய்ப்பு, கல்வி, ஊதிய குடும்ப விடுப்பு மற்றும் மருத்துவ விரிவாக்கம் போன்ற நான்கு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது வசீர் வகுத்துள்ள திட்டமாகும்.

பிபிசி 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்த மிகச்சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலில் வசீரும் இடம்பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Wood, Josh (October 2, 2018). "Safiya Wazir: the former refugee vying for a New Hampshire state house seat". The Guardian. https://www.theguardian.com/us-news/2018/oct/02/safiya-wazir-new-hampshire-refugee-state-representative. 
  2. 2.0 2.1 2.2 McLaughlin, Kelly (November 7, 2019). "An Afghan refugee who fled the Taliban was voted into New Hampshire's House of Representatives". Business Insider. பார்க்கப்பட்ட நாள் October 24, 2019.McLaughlin, Kelly (November 7, 2019). "An Afghan refugee who fled the Taliban was voted into New Hampshire's House of Representatives". Business Insider. Retrieved October 24, 2019.
  3. Shenoy, Rupa (November 3, 2018). "A former refugee could win a seat in one of the whitest statehouses in America". Pittsburgh Post-Gazette. https://www.post-gazette.com/news/nation/2018/11/01/Safiya-Wazir-former-refugee-New-Hampshire-one-of-whitest-statehouses-in-America/stories/201810010214. 
  4. Emison, Linnea (November 1, 2018). "Safiya Wazir Was a Refugee, Now She's a State House Candidate". Rolling Stone. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019.
  5. "Afghan Refugee, 27, Wins Primary Election for Seat in New Hampshire State Legislature". rferl.org. September 12, 2018. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019.
  6. Axelrod, Jim (November 7, 2018). "2 former refugees make history with midterm victories". CBS. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019.
  7. "BBC 100 Women 2018: Who is on the list?". BBC News. November 19, 2018. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேபியா_வசீர்&oldid=3857646" இலிருந்து மீள்விக்கப்பட்டது