சேனா ஜிலி
Appearance
சேனா ஜிலி | |
வகை | இனிப்பு |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின் |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | நிமாபடா, ஒடிசா |
முக்கிய சேர்பொருட்கள் | பாலாடைக்கட்டி, சர்க்கரைப் பாகு |
சேனா ஜிலி (ஒடியா: ଛେନାଝିଲି; ஆங்கிலம்:Chhena jhili) என்பது இந்தியாவின் ஒடிசா மாநில உணவு வகைகளில் பிரபலமான இனிப்பு ஆகும். இதன் பிறப்பிடம் பூரி மாவட்டத்தில் உள்ள நிமபதா ஆகும். இது வறுத்த பாலாடைக்கட்டி மற்றும் சர்க்கரை பாகில் தயாரிக்கப்படுகிறது.[1]
இந்த இனிப்பைத் தயாரிக்கத் தொடங்கியவர் நிமாபராவின் சியாம் சுந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்தா சாஹூ என்பவர்.[சான்று தேவை]
தேவையானப் பொருட்கள்
[தொகு]- இந்தியப் பாலாடைக்கட்டி - 400 கிராம்
- சர்க்கரை - 2 கோப்பை
- கோதுமை மாவு - 2 தேக்கரண்டி
- ஏலக்காய்த் தூள் - ½ தேக்கரண்டி
- சுத்தமான நெய் - 500 மி.லி
இவை பொதுவாக நன்கு அறியப்பட்ட பொருட்கள். ஆனால் இந்த உணவு தயாரிக்கும் செய்முறை குடும்ப இரகசியமாக மறைந்த ஆர்தா சாஹூவின் வாரிசுகளால் பராமரிக்கப்படுகிறது.
பொதுவாகச் சிறிய உருண்டைகளாக உருட்டப்பட்ட பாலாடைக்கட்டிகளை நன்கு பொரித்து எடுத்து, ஏலக்காயுடன் கொதிக்கவைக்கப்பட்ட சர்க்கரைப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கப்படுகிறது.[2]