சேனரத் பரணவிதான

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனரத் பரணவிதான
பிறப்பு(1896-12-26)26 திசம்பர் 1896
மெத்தரம்பை, காலி, இலங்கை
இறப்பு4 அக்டோபர் 1972(1972-10-04) (அகவை 75)
தேசியம்இலங்கை இலங்கையர்
இனம்சிங்களவர்
கல்விமெத்தரம்பை பெண்கள் பள்ளி, பொன விஸ்தா பள்ளி காலி, லெய்டன் பல்கலைக்கழகம்
பணிதொல்லியலாலர், கல்வெட்டியலாளர்
சமயம்தேரவாத பௌத்தம்
வாழ்க்கைத்
துணை
ரோஸ்லின் கித்துல்கொட

சேனரத் பரணவிதான (சிங்களம்:සෙනරත් පරණවිතාන) (26 டிசம்பர் 1896 – 4 அக்டோபர் 1972) இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளரும், கல்வெட்டியலாளரும் ஆவார். இவரது பணிகள் 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இலங்கையின் தொல்லியல் துறையிலும், வரலாற்றிலும் ஆதிக்கம் செலுத்தின. எச். சி. பி பெல், டொன் மார்ட்டினோ டி சில்வா விக்கிரமசிங்க ஆகியோருக்குப் பின்னர் 1940ல் இவர் தொல்லியல் ஆணையாளரானார்.

வரலாறு[தொகு]

பரணவிதான 1896 டிசம்பர் 26 ஆம் தேதி காலியில் உள்ள மெத்தரம்பை என்னும் இடத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை மெத்தரம்பை அரசாங்கப் பள்ளியில் பெற்ற அவர், பின்னர் காலியில் உள்ள பொன விஸ்தா பள்ளியில் சேர்ந்தார். கீனட்டிகல என்னும் இடத்தில் இருந்த ரன்வலிகொட பிரிவேனாவில் கிழக்கத்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றதுடன், உடுகம்பொல அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1923ல் பரணவிதான தொல்பொருளியல் திணைக்களத்தில் பணியில் அமர்ந்தார். 1930ல் திருமணம் செய்துகொண்டார். 1936ல், லெய்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பரணவிதான 1940 அக்டோபர் முதலாம் தேதி தொல்லியல் ஆணையாளராகப் பதவி ஏற்றார். 1956 ஆம் ஆண்டுவரை அவர் இப்பதவியில் இருந்தார். 1957ல் இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் தொல்லியல் பேராசிரியராகப் பணியேற்றார்.

இவர் தொல்லியல் திணைக்களத்தில் பதவியில் அமர்ந்த காலம் இரண்டாம் உலகப்போர்க் காலமாக இருந்தாலும், இவரது 17 ஆண்டுப் பதவிக்காலம் பயனுள்ளதாகவே அமைந்திருந்தது. இவரது எழுத்துக்களால் இலங்கையின் வரலாறும், வரலாற்றுக்கு முந்திய காலமும் விளக்கம் பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனரத்_பரணவிதான&oldid=2717444" இலிருந்து மீள்விக்கப்பட்டது