சேத்தன் பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேத்தன் பகத்

பிறப்பு {{{birthname}}}
ஏப்ரல் 22, 1974 (1974-04-22) (அகவை 48)
இந்தியாபுது தில்லி, இந்தியா
தொழில் நாவலாசிரியர், வங்கியாளர், கதை எழுத்தாளர்
நாடு இந்தியன்
இலக்கிய வகை அறிவியல் மேலாண்மை, நகைச்சுவை
http://www.chetanbhagat.com

சேத்தன் பகத் (இந்தி: चेतन भगत) ஒரு இந்திய நூலாசிரியர், இவர் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ அட் ஐஐடி, ஒன் நைட் @ தி கால் சென்டர், தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் மற்றும் டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒன் நைட் @ தி கால் சென்டர் புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு ஹலோ என்னும் இந்தி திரைப்படத்திற்கான திரைக்கதையையும் அவர் எழுதியுள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

சேத்தன் பகத் புது தில்லியில் பிறந்தவர், அவர் புது தில்லியின் தவுலா கான் இராணுவப் பொதுப் பள்ளியில் படித்தார். தன்னுடைய எந்திரப் பொறியியல் படிப்பை, தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-Delhi) 1995ம் ஆண்டு முடித்தார். முதுகலை வணிக மேலாண்மை படிப்பை, அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (IIM-Ahmedabad) 1997ம் ஆண்டு முடித்தார். இங்கு அவர் "வெளியேறும் மிகச் சிறந்த மாணவன்" என்று பெயரெடுத்தார். அவர் ஹாங்காங்கில் டியூட்சே வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார், 2008 ஆம் ஆண்டில் தன் மனைவி அனுஷாவுடன் மும்பைக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகி தன் எழுத்துப் பணிக்காக முழு நேரத்தையும் ஒதுக்க முடிவுசெய்துவிட்டார். அவருடைய மனைவி அனுஷா இந்திய மேலாண்மை கல்விநிறுவனத்தில் அவருடைய வகுப்புத்தோழி.

எழுதும் பாணி[தொகு]

பகத்தின் எழுதும் பாணி நீளமான வருணனையுடனும் தெளிவான கதைசொல்லலுடன், எளிமையாக இருக்கிறது. அவருடைய முக்கிய கதாபாத்திரங்கள் ஹரி, ஷியாம், கோவிந்த் அல்லது கிருஷ்ணா என இறைவன் கிருஷ்ணனின் பெயரையே சார்ந்திருக்கின்றன.[1] அவருடைய எல்லா புத்தகங்களின் தலைப்புகளிலும் எண் இருக்கும் (உ-த: முதல் புத்தகத்தில் 'ஐந்து' இரண்டாவதில் 'ஒன்று', மூன்றாவதில் 'மூன்று' மற்றும் சமீபத்திய புத்தகத்தில் 'இரண்டு') இதைப் பற்றிக் கேட்டபோது சேத்தன் கூறியது "நான் ஒரு வங்கியாளர், என்னுடைய தலையிலிருந்து எண்களை வெளியேற்றமுடியாது."[சான்று தேவை]

விமர்சகர்களின் அற்பமான மதிப்பீடுகள் குறித்து பதிலளிக்கையில், பகத் தன்னுடைய புத்தகங்கள் வெறும் பொழுதுபோக்கிகள் என்றும் அவை தீவிரமான இலக்கியத்தின் முயற்சிகள் அல்ல என்றும் கூறினார்.[சான்று தேவை]

அவர் தைனிக் பாஸ்கர் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் அரசியல் விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதும் பத்திரிக்கையாளர். அவர் சிங்கப்பூர் நாட்டுக் குடியுரிமை பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்.[2]

புதினங்கள்[தொகு]

1. ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ @ ஐஐடி தான், அவருடைய முதல் புத்தகம். மூன்று வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் மூன்று ஐஐடி தில்லி மாணவர்கள் - ஹரி, ரையான் மற்றும் அலோக் பற்றிய கதை. அவர்கள் தில்லி ஐஐடியில் இருந்த ஆண்டுகளைப் பற்றியும் அவர்கள் தங்கள் படிப்பு, குடும்பம் மற்றும் உறவுகளால் ஏற்படும் அழுத்தங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் புத்தகம் கூறுகிறது. அற்பமான விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதிலும்[சான்று தேவை] பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று பகத்துக்கு நிறைய ஆதரவாளர்களைச் சேர்த்தது. "மெட்ராஸ் ப்ளேயர்ஸ்" என்னும் நாடகக் குழுவினரால் அது ஒரு நாடகமாக்கப்பட்டது. த்ரீ இடியட்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு திரைப்படமாகவும் இந்தப் புத்தகம் தழுவப்பட்டது, இருந்தபோதிலும் கதைவசனம் எழுதுவதில் தான் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.[3][4][5] ராஜ்குமார் ஹிராணி அவர்களால் இயக்கப்பட்டு ஆமிர் கான், ஆர். மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தத் திரைப்படம், டிசம்பர் 25, 2009 அன்று வெளியானது.[6][7].

2. ஒன் நைட் @ தி கால் சென்டர் என்ற புத்தகம் பொதுமக்கள் வரவேற்புடன் இந்தியாவில் அக்டோபர் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு கால்சென்டரில் பணிபுரியும் ஆறு நபர்களைப் பற்றியும் அவர்கள் கடவுளிடமிருந்து பெறும் ஒரு அழைப்பின் இரவைப் பற்றியது இந்தப் புத்தகம். பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ரோஹன் சிப்பி, சேத்தன் பகத்திடமிருந்து உரிமைகளை வாங்கிவைத்திருந்தார், ஆனால் பின்னர் சிப்பி அந்த உரிமைகளை இயக்குநர் அடுல் அக்னிஹோத்ரிக்கு மாற்றி விட்டார் இவர் சல்மான் கானின் மைத்துனராவார். நாவலின் திரைப்படப் பதிப்பு ஹலோ என்று பெயரிடப்பட்டு அதில் சல்மான் கான், சோஹைல் கான், அர்பாஸ் கான், அம்ரிதா அரோரா, இஷா கோப்பிகர், குல் பனாக், ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடித்திருந்தனர். வெள்ளித் திரையில் பொருந்தும் வகையில் அதை மாற்றியமைப்பதற்காக திரைப்படத்தின் திரைக்கதையில் சேத்தன் நேரடியாகப் பணிபுரிந்தார். என்றாலும் அந்தத் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை.[சான்று தேவை]

3. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் சேத்தனின் மூன்றாவது புத்தகம், இது மட்டைப்பந்தாட்டம், மதம்சார்ந்த அரசியல் மற்றும் கலகக் காதல் பற்றிப் பேசுகிறது. கொஞ்சம் பணமும் பேரும் சம்பாதிப்பதற்காக மூன்று நண்பர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதும் அதை அவர்கள் எப்படி சரிபடுத்துகிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறது. புத்தகம் மே 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, அதன் தொடக்க அச்சாக 200,000 பிரதிகளைக் கொண்டிருந்தது.[8] மேற்கு இந்தியாவின் அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று நண்பர்களின் கதையை நாவல் தொடர்கிறது. இது அவரை இந்தியா வரலாற்றில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாவலாசிரியராக்கியது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஃபர்ஹான் அக்தரின் எக்சல் என்டர்டெய்ன்மெண்ட் அதன் உரிமையை வாங்கியிருக்கிறது, இது ராக் ஆன் புகழ் அபிஷேக் கபூர் அவர்களால் இயக்கப்படும்.

4. டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற புத்தகம், இந்தியாவில் காதல் திருமணங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பற்றியது. முதல் நபராக இது மீண்டும் அவருடைய எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது. இதுவும் அவருடைய முதல் புத்தகமான ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் போலவே தன்னுடைய சொந்த வாழ்க்கையால் உந்தப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.[9] மிக அதிகமாக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இந்தப் புத்தகத்தின் முதல் அச்சுக்கு அதன் வெளியீட்டாளர்கள் ரூபா & கோ. எப்போதும் இல்லாத அளவுக்கு இருநூறு டன் அளவுக்குக் காகிதங்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கையாளராக[தொகு]

மிகப் பெரிய இந்தி செய்தித்தாளான தைனிக் பாஸ்கர் மற்றும் ஆங்கில தினசரியான தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் தலையங்கத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பத்தி பகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முக்கிய நோக்கம் பொழுதுபோக்குவதற்கு ஆனால் நான் எழுதும் பத்திகள் தேசம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது பற்றிய என் கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.[சான்று தேவை]

அவருடைய சில பத்திகள் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]. பெரும்பாலான மக்களை ஈர்க்கும் நோக்கத்தில் அவருடைய கட்டுரைகள் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. ஊக்கப்படுத்தும் பேச்சுகளை வழங்குவதற்காக இந்தியாவில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கும் அவர் சென்று வருகிறார். புனேவில் அவருடைய பேச்சான 'ஸ்பார்க்' மிகவும் பரவலான புகழைப் பெற்று பல செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது.[சான்று தேவை].

விருதுகள்[தொகு]

 • 2004 ஆம் ஆண்டில் சொசைடி இளம் சாதனையாளர் விருது.[சான்று தேவை]
 • 2005 ஆம் ஆண்டில் வெளியீட்டாளர்களின் அங்கீகாரத்திற்கான விருது.[சான்று தேவை]

நூல் விவரத் தொகுப்பு[தொகு]

 • ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ @ ஐஐடி (2004)
 • ஒன் நைட் @ தி கால் சென்டர் (2005)
 • தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் (2008)
 • டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் (2009)

சேத்தன்பிளாக்ஸ் சர்ச்சை[தொகு]

டிசம்பர் 7, 2009 அன்று அவருடைய புத்தகங்களின் பதிப்புரிமை மீறிய வெளியீடு பற்றி அவருடைய டிவீட்களில் ஒருவர் புலம்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதம் காரணமாக சேத்தன் பகத் தன் ஆதரவாளர்களுடன் டிவிட்டரில் மோதினார்.[10] அவர்களை அவர் தடைசெய்யப்போவதாகவும் மிரட்டினார்,[11][12] பின்னர் அவ்வாறே செய்தார். இதற்கு டிவிட்டரில் எல்லா வகையான எதிர்வினைகளும் இருந்தன, ஆதரவுகளிலிருந்து கடுஞ்சீற்றங்கள் வரையும் மற்றும் பொழுதுபோக்கிகள் வரை இருந்தது. "#சேத்தன்பிளாக்ஸ்" ,[13][14] டிவிட்டரில் பல மணிநேரங்கள் செல்தட விஷயமாகிவிட்டது.[15][16][17][18]. சில டிவிட்டர்களை தான் ஏன் தடைபடுத்தினார் என்பதற்கான காரணங்களை அவர் பின்னர் டிவீட் செய்தார், சிறிது நேரத்திற்குப் பின்னர் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்தி சில டிவீட்களை நீக்கினார்.

த்ரீ இடியட்ஸ் சர்ச்சை[தொகு]

அவருடைய புத்தகம் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ @ ஐஐடி, தழுவப்பட்டு த்ரீ இடியட்ஸ் திரைப்படமானது. ராஜ்குமார் ஹிராணி அவர்களால் இயக்கப்பட்டு, அபிஜத் ஜோஷி திரைக்கதை எழுத, விது வினோத் சோப்ரா அவர்களால் தயாரிக்கப்பட்டது. த்ரீ இடியட்சில் ஆமிர் கான், ஆர். மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர், ஓமி வைத்யா, பரிக்ஷித் சாஹ்னி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர். வெளியீட்டைத் தொடர்ந்து திரைப்படம் அருமையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

டிசம்பர் 31, 2009 அன்று சேத்தன் பகத் தன்னுடைய வலைப்பூவில் ஒரு புத்தகம், ஒரு திரைப்படம் மற்றும் ஒரு உண்மை [19] என்னும் தலைப்பில் ஒரு பதிவைச் செய்தார், அதில் அவர் திரைப்படத்தின் இறுதி ஸ்கிரிப்ட் தனக்குக் காட்டப்படவில்லையென்றும் 'புத்தகத்தால் 2% - 5% வரை மட்டுமே தூண்டப்பட்டதாக' தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். உறுதியளித்தவாறு தனக்குரிய மரியாதையை அளிக்கவில்லையென்றும் தெரிவித்தார். முழு கட்டுரைக்கு இதைப் படிக்கவும் http://www.chetanbhagat.com/blog/general/a-book-a-film-and-the-truth பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம்

சேதனின் அறிக்கைக்கு சில நபர்கள் பதிலுரைத்தார்கள். இண்டோ-ஏஷியன் நியூஸ் சர்வீஸ் (IANS) கூற்றுப்படி, பத்திரிக்கையாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா "தயாரிப்பாளர்கள் மற்றும் பகத்துக்கிடையிலான ஒப்பந்தத்தில், எழுத்தாளரின் பெயர் இறுதி நன்றியறிவிப்பில் காட்டப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டதை அவர் தெளிவுபடுத்தினார்." "அவருடைய வெற்றிப்படமான த்ரீ இடியட்ஸ், எழுத்தாளர் சேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் புத்தகத்திலிருந்து திருடப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டவுடன்" சோப்ரா "தன்னுடைய நிதானத்தை இழந்து, ஒரு நிருபரைப் பார்த்து வாயை மூடிக்கொண்டிருக்கும்படி கூறினார்" என்றும் IANS தெரிவிக்கிறது. சோப்ரா பின்னர் இவ்வாறு மன்னிப்புகேட்டார்: "உண்மையிலேயே நான் மடத்தனமாக நடந்துகொண்டேன் என்று எண்ணுகிறேன். நான் தூண்டப்பட்டேன், ஆனால் நான் இதைச் செய்திருக்கக் கூடாது. நான் என்னையே தொலைக்காட்சியில் பார்த்தேன், ஒரு மிருகம் போல் 'வாயை மூடு, வாயை மூடு' என்று எப்படி கத்திக்கொண்டிருந்தேன் என்பதைப் பார்த்தேன். நான் எனக்கே சொல்லிக் கொண்டேன் — 'என்னவொரு முட்டாள்தனமான நடத்தை'. "இந்தக் கோரிக்கைகளுக்கு ஆமிர்கான் கூட பதிலளித்தார். ராஜ்குமார் ஹிராணி இவ்வாறு தெரிவித்தார், "திரைப்படத்திற்காக நாங்கள் அதிகாரப்பூர்வமாக உரிமைகளை வாங்கியிருக்கிறோம். நாங்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம் அதில் அவருடைய பெயர் எந்த இடத்தில் வரும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திறந்த விழிகளுடன் அவர் ஒப்பந்தத்தைப் பார்த்திருக்கிறார், தன்னுடைய வழக்குரைஞரை ஆலோசித்தார் அதன் பின்னரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் [...] ஒப்பந்தத்தில் நாங்கள் தலைப்பை இறுதி நன்றியறிவிப்புகளில் கொடுப்போம் என்று கூறியிருக்கிறோம். நாங்கள் எழுத்துரு அளவை மாற்றவில்லை. தலைப்பின் வேகத்தை அதிகரிக்கவில்லை. அது எங்கு இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டதோ அதே இடத்தில் இருக்கிறது." பகத் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கிடையிலான உறவு தொடர்பான சட்டப்படியான ஆவணங்கள் வினோத் சோப்ரா தயாரிப்பு வலைதளத்திலும் கூட சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் பெருவாரியான மக்கள், முக்கியமாக சேத்தன் பகத்தின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள், நூலாசிரியருக்கு ஆதரவாக இருப்பதாகத் தோன்றுகிறது. எந்தவொரு தழுவலைப் போலவே அசல் கதையிலிருந்து திரைக்கதை சற்றே வேறுபட்டிருந்தாலும் திரைப்படத்தின் தொடக்கத்தில் தோன்றும் கதைக்கான நன்மதிப்புடன் நூலாசிரியர் சேத்தன் பகத்தின் பெயரும் கூட சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

ஒரு சமீபத்திய பேட்டியில் சேத்தன் பகத் கூறினார், "'த்ரீ இடியட்ஸ்' குழுவுக்கு எதிராக எனக்கு நிச்சயமாக எந்த விரோதமும் இல்லை. அவர்களுடைய குறைபாடு மீது எனக்கு சில விஷயங்கள் இருக்கிறது ஆனால் தனிப்பட்ட முறையில், அவர்களுடைய தனிப்பட்ட பண்பு அல்லது அவர்கள் நடந்துகொள்ளும் முறை தொடர்பாகவும் அவர்களிடம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால் இவை யாவற்றாலும் அவர்கள் குடும்பத்தாருக்கு ஏதாவது துன்பங்கள் நேர்ந்திருந்தால் நான் பணிவோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." மேலும் அவர் கூறியதாவது, "நான் உண்மையிலேயே என்னுடைய எல்லா ஆதரவாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும், அவர்கள் தொடர்ந்து என்னுடன் இருந்தார்கள் ஆனால் என்னுடைய ஆதரவாளர்கள் யாரும் அவர்களுக்கு, குறிப்பாக ஆமிர் கானுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்."

தனிப்பட்ட விஷயம்[தொகு]

சேத்தன் பகத், ஐஐஎம்ஏ வின் முன்னால் வகுப்புத்தோழியான அனுஷாவைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஷியாம் மற்றும் இஷான் என இரட்டை மகன்கள் இருக்கிறார்கள்.

குறிப்புதவிகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. "My next novel is a love story: Chetan Bhagat". 2009-01-29.
 2. [type+Function]&rewindMvFunOpCl=[தொடர்பிழந்த இணைப்பு][type+Function]&ReplayMvFunOpCl=[type+Function]&MakingMvFunOpCl=[type+Function]&MakeMvFunOpCl=[type+Function]&Home=[type+Function]&film=[type+Function]&whats=[type+Function]&backstage=[type+Function]&company=[type+Function]&team=[type+Function]&forthcome=[type+Function]&past=1&awards=[type+Function]&news=[type+Function]&pressRelease=[type+Function]&making=[type+Function]&methodology=[type+Function]&about=[type+Function]&contact=[type+Function]&career=[type+Function]&teamMem=[type+Function]&teamMem1=[type+Function]&teamMem2=[type+Function]&teamMem3=[type+Function]&bio=0
 3. "சேத்தன் பகத் எஃப்பிஎஸ் வேறுபாடு மீதான ஸ்டார் நியூஸ் காணொளி". 2010-01-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. ‘த்ரீ இடியட்ஸ்’ஸின் இறுதித் திரைக்கதை எனக்குப் பிடித்திருந்தது: சேத்தன் பகத் பரணிடப்பட்டது 2010-01-29 at the வந்தவழி இயந்திரம் தி இந்தியன் நியூஸ் மீட்டெடுக்கப்பட்ட நாள் 2009-02-11
 5. "Kajol officially refuses Aamirs Hirani project".
 6. "Authentic and Up to date Release Dates of Bollywood Movies" (in ஆங்கிலம்). 2009-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link)
 7. "Aamir's next film based on Chetan Bhagat's story!". 2009-08-17. 2011-07-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. G Sampath (2008-05-18). "Author as everyman". DNA. http://www.dnaindia.com/report.asp?newsid=1164965. 
 9. "Shakespeare was the Ekta Kapoor of his time". 2009-08-20.
 10. "Chetan Bhagat's tweet wars". Hindustan Times. December 8, 2009. 13 டிசம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. "@flyyoufools buddy, one more smart one and u r blocked. ok?". Twitter. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Virtual mob takes on Chetan Bhagat on Twitter". Sify. 2009-12-07. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Chetan's Twitter woes". Bangalore Mirror. December 7, 2009. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. "Best of #chetanblocks". chetanblocks.com. 14 டிசம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. "Chetan Bhagat's one night on Twitter". Mid-day. 2009-12-08. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Chetan Bhagat bajoed on Twitter". Bindass.com. December 7, 2009. 12 டிசம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 17. "Writer's 'block' for Chetan-baiters on Twitter". The Indian Express. ExpressBuzz. 08 Dec 2009. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
 18. "It's Chetan Bhagat versus the rest on Twitter". Mail Today. December 8, 2009. 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்தன்_பகத்&oldid=3509824" இருந்து மீள்விக்கப்பட்டது