சேது விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேது விரைவுத் தொடர்வண்டி
Sethu Express Display.jpg
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்18
முடிவுராமேஸ்வரம் (RMM)
ஓடும் தூரம்603 கி.மீ (375 மைல்)
சராசரி பயண நேரம்11 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்22661/22662
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)2 AC, 3 AC, SL, UR
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்பெரிய சாளரம்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்51 km/h (32 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Sethu Express (MS-RMM) Route map.jpg

சேது விரைவுத் தொடர்வண்டி (Sethu Express) என்பது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் அதிவிரைவுத் தொடர் வண்டியாகும். இது சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இது 22 ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு தினசரி தொடர் வண்டியாகும். இந்த இரயில் சராசரியாக 603 கி. மீ (374 மைல்) தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கிறது.

சொற்பிறப்பு[தொகு]

18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் "சேதுபதி" சமஸ்தானம் (இளவரசர்) மன்னர் நினைவாக பெயரிடப்பட்டது.[சான்று தேவை]

Sethu Express - Old trainboard

வழித்தடம்[தொகு]

சேது விரைவு இரயில்

சென்னையிலிருந்து, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக  இராமேஸ்வரம் சென்றடைகிறது, திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை RPM / ED WAP4 Electric Loco மூலம் இயக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மற்றும் இராமேஸ்வரம் இடையே GOC WDP3A / ED WDM3D டீசல் லோகோ மூலம் இயக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் இடையே, இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிமீ/மணிநேரத்தை அடைகிறது.

பெட்டிகளின் விவரம்[தொகு]

மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை  23

Loco SLR UR UR S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10 S11 S12 B3 B2 B1 A1 HA1 UR UR SLR

பெட்டி பகிர்தல்[தொகு]

கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயங்கும், அனந்தபுரி விரைவு வண்டியுடன் (RSA) 16723/24 இரயில் பெட்டி பகிர்வு செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேது_விரைவு_வண்டி&oldid=3106049" இருந்து மீள்விக்கப்பட்டது