சேது அதிவேக விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேது அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்15
முடிவுஇராமேஸ்வரம் (RMM)
ஓடும் தூரம்601 km (373 mi)
சராசரி பயண நேரம்10மணி 25நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்22661/22662
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)
 • குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டி (HA)
 • குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டி (A)
 • குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள் (B)
 • குளிர்சாதனம் இல்லாத படுக்கை வசதி பெட்டிகள் (SL)
 • முன்பதிவற்ற பொதுபெட்டிகள் (GS)
 • சாமான், மகளிர், கார்டு பெட்டிகள் (SLRD).
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்On-Board Catering, e-Catering
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு
 • சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை WAP-4 Loco from Arakkonam & Erode Electric Shed
 • திருச்சிராப்பள்ளி சந்திப்பு - இராமேஸ்வரம் WDM-3D Loco from Golden Rock (Ponmalai) Diesel Shed
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புப்பாதை)
வேகம்66 km/h (41 mph) மணிக்கு 120Km/h
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
வழிகாட்டுக் குறிப்புப் படம்

சேது விரைவு வண்டி (Sethu Superfast Express) என்பது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் அதிவிரைவுத் தொடர் வண்டியாகும். இது சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இது 22 ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு தினசரி தொடர் வண்டியாகும். இந்த இரயில் சராசரியாக 601 கி. மீ (374 மைல்) தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கிறது.இது இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டல ரயில்சேவைகளுள் ஒன்றாகும்.


சொற்பிறப்பு[தொகு]

18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் "சேதுபதி" என்ற மன்னரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த வண்டிக்கு சேது அதிவிரைவு வண்டி என பெயரிடப்பட்டது.


வழித்தடம்[தொகு]

சேது அதிவிரைவு வண்டி சென்னையிலிருந்து, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக  இராமேஸ்வரம் சென்றடைகிறது. திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம் வரை, இந்த ரயில் அதிகபட்சமாக 120km/h எனும் வேகத்தில் செல்கிறது.

வண்டி எண்[தொகு]

 • 22661 – சென்னை எழும்பூரில் தினசரி மாலை 17மணி 45நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 04மணி 10நிமிடங்களுக்கு ராமேஸ்வரத்தை சென்றடைகிறது. [1]
 • 22662 – மறுமார்கமாக இரவு 20மணி 20நிமிடங்களுக்கு இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07மணி 10நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.[2]

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

22661 ~ சென்னை எழும்பூர் → இராமேஸ்வரம் ~ சேது அதிவிரைவு வண்டி
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS SOURCE 17:45
தாம்பரம் TBM 18:13 18:15
செங்கல்பட்டு சந்திப்பு CGL 18:43 18:45
மேல்மருவத்தூர் MLMR 19:08 19:10
திண்டிவனம் TMV 19:33 19:35
விழுப்புரம் சந்திப்பு VM 20:20 20:25
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 21:05 21:07
அரியலூர் ALU 21:40 21:41
ஸ்ரீரங்கம் SRGM 22:23 22:25
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி) TPJ 23:15 23:25
புதுக்கோட்டை PDKT 00:08 00:10
காரைக்குடி சந்திப்பு KKDI 00:48 00:50
சிவகங்கை SVGA 01:28 01:30
மானாமதுரை MNM 01:58 02:00
பரமக்குடி PMK 02:23 02:25
ராமநாதபுரம் RMD 02:48 02:50
இராமேஸ்வரம் RMM 04:10 DEST
22662 ~ இராமேஸ்வரம் → சென்னை எழும்பூர் ~ சேது அதிவிரைவு வண்டி
இராமேஸ்வரம் RMM - 20:20
மண்டபம் MMM 20:51 20:52
ராமநாதபுரம் RMD 21:18 21:20
பரமக்குடி PMK 21:43 21:45
மானாமதுரை MNM 22:08 22:10
சிவகங்கை SVGA 22:33 22:34
தேவகோட்டை ரோடு DKQ 23:05 23:06
காரைக்குடி சந்திப்பு KKDI 23:18 23:20
புதுக்கோட்டை PDKT 00:03 00:05
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி) TPJ 01:15 01:25
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 02:58 03:00
விழுப்புரம் சந்திப்பு VM 04:00 04:05
திண்டிவனம் TMV 04:35 04:37
மேல்மருவத்தூர் MLMR 04:58 05:00
செங்கல்பட்டு சந்திப்பு CGL 05:28 05:30
தாம்பரம் TBM 05:58 06:00
மாம்பலம் MBM 06:18 06:20
சென்னை எழும்பூர் MS 07:10 -


இழுவை இயந்திரம்[தொகு]

 • சேது அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை WAP-4 எனும் 5350HP திறன் கொண்ட மின்சார இழுவை இயந்திரம் மூலம் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
 • திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து இராமேஸ்வரம் வரை WDM-3D எனும் அதிக சக்கிவாய்ந்த டீசல் இழுவை இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.

பெட்டி வரிசை[தொகு]

இந்த வண்டியில் மொத்தம் 23 பெட்டிகள் உள்ளன. அவற்றுள் குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் உரண்டாம் வகுப்பு பெட்டி (HA), குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டி (A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள் (B), குளிர்சாதனம் இல்லாத படுக்கை வசதி பெட்டிகள் (SL), முன்பதிவற்ற பொதுபெட்டிகள் (GS) மற்றும் சாமான், மகளிர், கார்டு பெட்டிகள் (SLRD).

Loco 1 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
SLR GS GS S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10 S11 S12 S13 B3 B2 B1 A1 HA1 GS SLR

பெட்டி பகிர்தல்[தொகு]

இராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயங்கும், இராமேஸ்வரம் (படகு மெயில்) விரைவு வண்டியுடன் (RSA) 16851/16852 இரயில் பெட்டி பகிர்வு செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]