சேதுராம் சிரேஸ்தா
சேதுராம் சிரேஸ்தா सेतुराम श्रेष्ठ | |
|---|---|
1941-ல் சேதுராம் சிரேஸ்தா | |
| பிறப்பு | 1891 அசான், காட்மாண்டு, நேபாளம் |
| இறப்பு | 1941 நேபாளம் |
| பெற்றோர் |
|
சேதுராம் சிரேஸ்தா (Seturam Shrestha) நேபாளத்தைச் சேர்ந்த இசைக்கலைஞரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நேபாளத்தில் நவீன இசையின் வளர்ச்சியில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். மேலும் இவர் ஒரு உஸ்தாத் என்றும் பாராட்டப்பட்டார். காதல் பாடல்களுக்கு மேலதிகமாக, சமூகச் சீர்திருத்தச் செய்திகளுடன் சேதுராம் பாடல்களைப் பாடினார்.[1]
சேதுராம், 1908 ஆம் ஆண்டில், கிராமபோன் இசைத் தட்டில் ஒரு பாடலைப் பதிவு செய்த முதல் நேபாள கலைஞராவார்.[2][3] இந்தியாவின் கொல்கத்தாவில் தனது நாட்டின் பாரம்பரிய ராஜமதி என்ற பாடலை பதிவு செய்தார். காட்மாண்டுவில் அப்போது இருந்த முக்கிய பத்ரகாளி ஹவுஸ் என்ற இசைத்தட்டு கடையின் உரிமையாளரான ஜனக் லால் சிரேஸ்தா, இசைப்பதிவுக்கு நிதியுதவி செய்தார்.
நேபாளத்தில் கசல் இசையில் முன்னோடியாகவும் சேதுராம் இருந்துள்ளார்.[4]
இளமை வாழ்க்கை.
[தொகு]காட்மாண்டுவிலுள்ள அசான் கமலாச்சியில் கிருஷ்ணா தர் மற்றும் தாய் அரி தேவி சிரேஸ்தா ஆகியோருக்கு மகனாகப் சேதுராம் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணாதரும் இசையில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இளம் வயதிலிருந்தே, ஆர்மோனியம் மற்றும் குரல் நுட்பங்களை வீட்டிலேயே கற்றுக்கொண்டார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]1965-ல், சேதுராம் பத்ரகாளி ஹவுஸ் என்ற இசைத்தட்டு நிறுவனத்தில் இசைப் பதிவு செய்ய கொல்கத்தாவுக்கு வந்தார். இவர் பதிவு செய்த படைப்புகளில் மோதிராம் பட்டா எழுதிய கசல் ஒன்று இடம்பெற்றது. இது நேபாள இசையின் ஆரம்பகால முறையான பதிவுகளில் ஒன்றாகும்.[5]
கசல்கள், பஜனைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நேவாரி பாடல்கள் உட்பட பல்வேறு வகைகளில் 30 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maharjan, Ashesh; Joshi, Mimansha (December 2008). "International Folk Music Festival 2008". ECS Nepal. http://www.ecs.com.np/feature_detail.php?f_id=130.
- ↑ Maharjan, Ashesh; Joshi, Mimansha (December 2008). "International Folk Music Festival 2008". ECS Nepal. http://www.ecs.com.np/feature_detail.php?f_id=130.
- ↑ Karmacharya, Avash (19 March 2010). "Radio Nepal's archive getting digitized". Republica. http://archives.myrepublica.com/portal/?action=news_details&news_id=16447.
- ↑ Maharjan, Ashesh; Joshi, Mimansha (December 2008). "International Folk Music Festival 2008". ECS Nepal. http://www.ecs.com.np/feature_detail.php?f_id=130.
- 1 2 3 "सेतुराम प्रधान Setu Ram Pradhan – नइ एकेडेमी". Retrieved 2025-06-16.