சேதுபாவா சுவாமிகள்
மன்னார்குடியில் இருந்த அனந்தமௌனி சுவாமிகளின் இரு சீடர்களில் ஒருவரான மேரு சுவாமிகளுக்கு சியாமராசர், சேது சுவாமிகள் ஆகிய இரு சீடர்கள் இருந்தனர்.[1]
சேது சுவாமிகள்
[தொகு]சேது சுவாமிகள் சேதுபாவா சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
ஆசி தரல்
[தொகு]தஞ்சையை கி.பி.1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அங்கிருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு அருளும்படி வேண்டியபோது அவர் தான் உலக வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளதாகவும், மன்னார்குடியில் இருக்கும் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெறவும் கூறினார். அதன்படி மன்னர் சேதுபாவா சுவாமிகளிடம் சென்று ஆசி பெற்று, தன் குருவிற்குத் தஞ்சாவூரின் கீழ ராஜவீதியில், தன் அரண்மனைக்கு எதிரில் ஒரு மடம் கட்டிக்கொடுத்து தங்கச் செய்து, குரு காணிக்கையாக பொன்னும், பொருளும் கொடுத்து கௌரவித்தார்.[1]
பெயரும் புகழும்
[தொகு]சுவாமிகளின் நினைவாக மன்னார்குடியில் அன்ன சத்திரமும், அரித்ரா நதி என்னும் குளமும், அக்குளத்தின் கரையில் உள்ள கோயிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சேதுபாவா சத்திரம் என்னும் ஊரும், தஞ்சாவூர் பிரதாபவீர அனுமார் (மூலை அனுமார்) கோயிலும் விளங்கி இவரது பெயரையும், புகழையும் இன்றும் நிலைநிறுத்தி வருகின்றன. இவரது சமாதி கும்பகோணம் அருகேயுள்ள குத்தாலத்தில் உள்ளது.[1]