சேணம்
Jump to navigation
Jump to search
சேணம் (saddle) என்பது சவாரி மிருகங்களின் மேல் அமர்வதற்காக அதன் முதுகில் பூட்டப்படும் தோல் இருக்கையாகும். பொதுவாகக் குதிரையின் மீது பயன்படுத்தப்படும் இது, பிரத்தியேக முறைகளால் தயாரிக்கப்பட்டு ஒட்டகம் போன்ற பிற மிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் குதிரைச் சேணத்தின் கண்டுபிடிப்பு சவாரி செய்வதில் மட்டுமல்ல, குதிரைப் படைப்பிரிவின் உருவாக்கத்திலும் மாபெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. பழங்காலத்தில் அட்டைகளில் உருவாக்கப்பட்ட சேணங்கள் பிற்காலத்தில் தோல் பொருட்களால் உருவாக்கப்படுகிறது.