சேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேட்
வகை இலாபநோக்கற்ற அரசு அல்லாத அமைப்பு
உருவாக்கம் 1 மார்ச்சு 2004
இலக்கு மிதிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்குதல்
வழிநடத்தல் டாக்டர் சுதாகரன்
துறை மிதிவெடி அபாயக்கல்வி, உள நலம்
Scope இலங்கையில் வவுனியா கிளிநொச்சி மாவட்டங்கள்
இணையத்தளம் சேட்

சேட் அல்லது ஷேட் அமைப்பானது வரையயற்ற வைத்தியர்கள் (MSF) இலங்கையை விட்டு நீங்கும் தருணத்தில் உள்ளூரிலே உள சமூக ஆதரவை வழங்குவதற்கு என 1 மார்ச்சு 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது NGO Secretariat ஊடாகவும் இலங்கையில் கம்பனிகளைப் பதியும் சட்டம் ஊடாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆழிப்பேரலையை ஏற்படுத்திய அவலத்தைத் தொடர்ந்து சிறிது காலத்திற்கு இது தன் பணிகளை மட்டக்களப்பிற்கும் விரிவுபடுத்தியது. 2012 ஆம் ஆண்டு முதல் மிதிவெடி அபாயக் கல்வித்திட்டத்தை வவுனியா மாவட்டத்திலும் கிளிநொச்சியின் கரைச்சி பூநகரிப் பிரதேச செயலர் பகுதிகளிலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் நிதி, தொழில்நுட்ப அனுசரணையுடன் மிதிவெடி அபாயக் கல்வியினை வழங்கிவருகின்றது. மிதிவெடிகளாலும், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை சமூக சேவைத்திணைக்களத்துடன் இணைந்து வழங்கி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவுடனும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் தொழில்நுட்ப அனுசரணையுடன் வவுனியா மாவட்டத்தில் சிறுவர் விபத்துத் தவிர்ப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேட்&oldid=1930470" இருந்து மீள்விக்கப்பட்டது