சேக் ரகானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் ரகானா சித்திக்
பிறப்புசேக் ரகானா
13 செப்டம்பர் 1957 (1957-09-13) (அகவை 66)
துங்கிப்பரா, வங்காளதேசம்
அரசியல் கட்சிஅவாமி லீக்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
பேராசிரியர் முனைவர் சபீக் அகம்து சித்திக்[1]
பிள்ளைகள்ரத்வான் முஜிப் சித்திக்
அசுமினா சித்திக்
துலிப் சித்திக்[2]

சேக் ரகானா சித்திக் (Sheikh Rehana Siddiq) (பிறப்பு 13 செப்டம்பர் 1957) ஒரு வங்காளதேசம் அவாமி லீக் அரசியல்வாதியாவார். [3] இவர் பிரதமர் சேக் அசீனாவின் தங்கை, சேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார். [4] [5] பிரிட்டிசு தொழிலாளர் கட்சி அரசியல்வாதியாகவும், 2015 பொதுத் தேர்தலில் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு ஆம்ப்சுடெட் மற்றும் கில்பர்ன் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த துலிப் சித்திக்கின் தாயும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் வங்காளதேசத்தின் முதல் குடியரசுத் தலைவரன சேக் முஜிபுர் ரகுமான் மற்றும் சேக் பாசிலத்துன்னேசா முஜிப் ஆகியோருக்கு பிறந்தார் . வங்காளதேச விடுதலைப் போரின்போது பாக்கித்தான் இராணுவத்தால் இவரது குடும்பத்தினருடன் தன்மண்டியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [6] இவரது சகோதரி சேக் அசீனாவுடன் இவரது குடும்பம் வங்காளதேச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது இவர் பெல்ஜியத்தில் இருந்தார் [7] [8] [9] [10]

தொழில்[தொகு]

இவருக்கு 2001 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசாங்கத்தால் தன்மண்டியில் ஒரு அரசு வீடு ஒதுக்கப்பட்டது. இவரது தனிப்பட்ட ஊழியர்களைக் கொண்டு இந்தக் கட்டிடம் கட்டப்ப்பட்டது. வங்காளதேச தேசியவாத கட்சி ஆட்சிக்கு வந்தபோது இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அவாமி லீக் ஆட்சிக்கு வந்த பிறகு 2014 ஆம் ஆண்டில் குல்சனில் இவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. [11] 2015 ஆம் ஆண்டில் இவருக்கும் இவரது குழந்தைகளுக்கும் சிறப்பு பாதுகாப்புப் படைகள் மூலம் வங்காளதேச அரசு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்தது. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் வாழ்க்கைக்கான செலவினை ஏற்பதாக அரசாங்கம் அறிவித்தது. [12] இவர் 2016 இல் அவாமி லீக் டாக்கா தெற்குப் பிரிவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [13]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் தாக்கா பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் தகவல் அமைப்புகள் துறை, வணிக ஆய்வுகள் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் சபிக் அகமது சித்திக் என்பவரை மணந்தார். [14] இவரது மகன் ரத்வான் முஜிப் சித்திக் பாபி வங்காளதேச அவாமி லீக்கின் உறுப்பினர் ஆவார். [15] இவரது மகள், துலிப் சித்திக், ஆம்ப்சுடெட் மற்றும் கில்பர்ன் தொகுதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் தொழிலாளர் கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவரது மற்றொரு மகள் அசுமினா சித்திக் என்பவராவார். [16]

குறிப்புகள்[தொகு]

 1. https://www.bubt.edu.bd/assets/frontend/uploads/Safique_Sir_new_chairman_latest.pdf
 2. Chowdhury, Shoeb. "Sheikh Rehana: A sister behind shine and success | The Asian Age Online, Bangladesh". The Asian Age.
 3. "Sheikh Rehana's 60th birthday today" (in en-US). The Daily Ittefaq இம் மூலத்தில் இருந்து 2019-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106082055/https://www.clickittefaq.com/sheikh-rehanas-60th-birthday-today/. 
 4. "PM Hasina’s sister Rehana, daughter Putul will attend Awami League National Council". bdnews24.com. http://bdnews24.com/politics/2016/10/12/pm-hasinas-sister-rehana-daughter-putul-will-attend-awami-league-national-council. 
 5. "Bangabandhu's grandchildren Bobby, Putul not joining Awami League council as councillors". bdnews24.com. http://bdnews24.com/politics/2016/10/20/bangabandhu-s-grandchildren-bobby-putul-not-joining-awami-league-council-as-councillors. 
 6. "I would rather die than sign any false statement" (in en). The Daily Star. http://www.thedailystar.net/op-ed/politics/i-would-rather-die-sign-any-false-statement-1242298. 
 7. "Hasina revisits Delhi, her home from 1975-81". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2010/01/11/hasina-revisits-delhi-her-home-from-1975-81. 
 8. "'None wanted to shelter Mujib's daughters'". bdnews24.com. https://bdnews24.com/politics/2011/08/15/none-wanted-to-shelter-mujib-s-daughters. 
 9. "'Bangladesh govt mulling commission to unmask 1975 coup plotters'" (in en). Deccan Chronicle. http://www.deccanchronicle.com/world/neighbours/200816/bangladesh-govt-mulling-commission-to-unmask-1975-coup-plotters.html. 
 10. "Nation must repay the ‘debt of blood’ to Bangabandhu, martyrs, Hasina says". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2016/08/11/nation-must-repay-the-debt-of-blood-to-bangabandhu-martyrs-hasina-says. 
 11. "Sheikh Rehana getting a govt house in Gulshan". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2014/05/07/sheikh-rehana-getting-a-govt-house-in-gulshan. 
 12. "Bangabandhu family to get more security, free utility, foreign treatment". The Daily Star. http://www.thedailystar.net/country/bangabandhu-family-get-more-security-free-utility-foreign-treatment-87319. 
 13. "Sheikh Rehana, Putul made AL councilors". The Daily Star. http://www.thedailystar.net/politics/sheikh-rehana-putul-made-al-councilors-1298749. 
 14. "It's too much" (in en). The Daily Star. 2016-02-18. http://www.thedailystar.net/frontpage/its-too-much-574102. 
 15. "Radwan Mujib Siddiq Bobby joining Awami League council with cousin Sajeeb Wazed Joy". bdnews24.com இம் மூலத்தில் இருந்து 2017-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170131193625/http://bdnews24.com/politics/2016/10/11/radwan-mujib-siddiq-bobby-joining-awami-league-council-with-cousin-sajeeb-wazed-joy. 
 16. "Sheikh Rehana proud of Tulip Siddiq for her victory in British election". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2015/05/08/sheikh-rehana-proud-of-tulip-siddiq-for-her-victory-in-british-election. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_ரகானா&oldid=3538401" இலிருந்து மீள்விக்கப்பட்டது