சேக் கலீபா பின் சயத் அல் நகியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் கலீபா பின் சயத் அல் நகியான்
The President, Smt. Pratibha Devisingh Patil with the President of UAE, Sheikh Khalifa bin Zayed Al Nahayan at the Ceremonial Reception, at Mushrif Palace, in Abu Dhabi on November 22, 2010 (cropped).jpg
2010 இல் சேக் காலிபா
ஐக்கிய அரபு அமீரகத்தின் 2-வது அரசுத்தலைவர்
பதவியில்
3 நவம்பர் 2004 – 13 மே 2022
பிரதமர் மக்தும் பின் ராசிது அல் மக்தும்
முகமது பின் ராஷித் அல் மக்தூம்
முன்னவர் சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்
பின்வந்தவர் முகமது பின் ராஷித் அல் மக்தூம் (பதில்)[1]
அபுதாபியின் ஆட்சியாளர்
பதவியில்
2 நவம்பர் 2004 – 13 மே 2022
முன்னவர் சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்
பின்வந்தவர் முகமது பின் சாயது அல் நகியான்
தனிநபர் தகவல்
பிறப்பு காலிபா பின் சாயது அன் நாகியான்
செப்டம்பர் 7, 1948(1948-09-07)
அல் ஐன்
(ஐக்கிய அரபு அமீரகம்)
இறப்பு 13 மே 2022(2022-05-13) (அகவை 73)
வாழ்க்கை துணைவர்(கள்) சம்சா பிந்த் சுகைல்[2]
பிள்ளைகள் 8

சேக் கலீபா பின் சயத் அல் நகியான் (Khalifa bin Zayed bin Sultan Al Nahyan அரபு மொழி: خليفة بن زايد بن سلطان آل نهيان‎, 7 செப்டம்பர் 1948 – 13 மே 2022), ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் சனாதிபதியும், அந்நாட்டு அமீரகங்களில் ஒன்றான அபுதாபி அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளரும் ஆவார். இவரது தந்தையாரும் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் காலமான பின்னர், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, இவர் பதவியேற்றார். இவரது தந்தையின் முதுமை, உடல்நலக் குறைவு என்பன காரணமாக சேக் கலீபா இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகவே மேற்படி பதவிகளுக்கு உரிய பணிகளைத் தந்தையின் சார்பில் செய்துவந்தார்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட பின்னர், சேக் கலீபா, சனாதிபதியான தனது தந்தையின் கீழ் துணைப் பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1976 மே மாதத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகப் படைகளின் துணைத் தளபதியாகவும் ஆனார். அத்துடன் ஆற்றல் குறித்த விடயங்களில், செல்வாக்குடைய உயர் பெட்ரோலியம் அவையின் தலைவராகவும் செயலாற்றி வந்தார்.

சேக் கலீபா ஐக்கிய அரபு அமீரகத்தின் மரபுவழி விளையாட்டுக்களின் ஆர்வம் கொண்டவர். சிறப்பாக குதிரை ஓட்டம், ஒட்டக ஓட்டம் என்பவற்றில் அதிக அக்கறை காட்டிவந்தார். இவர் பொதுவாக மேற்குலகப் பாணியிலான நவீனமயப்படுத்தலுக்கு ஆதரவானவர். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 70% உயர்த்தி ஆணை வழங்கினார்.

கொடைகள்[தொகு]

போர்ப்சு சஞ்சிகையின் மதிப்பீடுகளின்படி, சேக் கலீபா உலகின் இரண்டாவது பணக்கார அரசர் ஆவார். இவரது சொத்து 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2007 ஏப்ரல் 30 ஆம் தேதி, ஜான்சு ஆப்கின்சு மருத்துவமனையின் இதயநரம்பு சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தைக் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார். இது அவரது காலஞ்சென்ற தந்தையாரான சேக் சயத்தின் நினைவாக அவரது பெயரில் வழங்கப்பட்டது. இவற்றோடு, இதயநரம்பியல், எயிட்சு ஆகிய துறைகள் குறித்த ஆய்வுகளுக்கும் நிதி வழங்கப்பட்டது. பாலசுத்தீனத்தின் காசா பகுதியில், சேக் கலீபா நகரம் என்ற பெயரில் குடியிருப்பு ஒன்றை அமைப்பதற்கும் இவர் நிதி வழங்கியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]