சேக்புரா
சேக்புரா | |
---|---|
![]() சேக்புரா நகரத்தின் கட்டிடம் | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சேக்புரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°08′25″N 85°51′03″E / 25.14028°N 85.85083°E | |
நாடு | ![]() |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | ஷேக்புரா மாவட்டம் |
பெயர்ச்சூட்டு | சூபி சேக் சாகிப் |
நகராட்சி | சேக்புரா நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 62,927[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது |
• வட்டார மொழி | மகதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 811105 |
தொலைபேசி குறியீடு | 06341 |
வாகனப் பதிவு | BR-52 |
இணையதளம் | Sheikhpura district website |
சேக்புரா (Sheikhpura), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சேக்புரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு தென்கிழக்கே 123.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேக்புரா நகரத்தில் வட்டார மொழியான மகதி மொழி பேசப்படுகிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 10,181 குடியிருப்புகளும் கொண்ட சேக்புரா நகரத்தின் மக்கள் தொகை 62,927 ஆகும். அதில் 33,137 ஆண்கள் மற்றும் 29,790 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.04 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.77 % மற்றும் 0.11 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.61%, இசுலாமியர் ,11.92%, கிறித்தவர்கள் 0.12% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர்.[2]அலுவல் மொழியாக இந்தி மற்றும் உருது உள்ளது.
போக்குவரத்து
[தொகு]சேக்புரா தொடருந்து நிலையம்[3]பட்னா, ஹவுரா, குவகாத்தி, கயை, ஜமால்பூர் மற்றும் கியுல்[4] நகரங்களுடன் இணைக்கிறது.