உள்ளடக்கத்துக்குச் செல்

சேகர் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேகர் குப்தா

சேகர் குப்தா (Shekhar Gupta, பிறப்பு: ஆகத்து 26, 1957) என்பவர் இந்திய இதழாளரும் எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆவார். இவர் இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார். சில ஆண்டுகள் இந்தியா டுடே இதழிலும், பிசினஸ் ஸ்டாண்டார்ட் இதழிலும் பணி செய்துள்ளார்.[1]

இதழ்ப் பணிகள்

[தொகு]

1977 ஆம் ஆண்டில் இந்தியன் எக்சுபிரசில் செய்தியாளராகச் சேர்ந்தார். வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றியும், ஊடுருவல் தாக்குதல்கள் பற்றியும் பஞ்சாபில் ஆபரேஷன் பூளு ஸ்டார் பற்றியும், லாசு ஏஞ்சல்சு ஒலிம்பிக்சு பற்றியும் பீக்கிங் தியனன்மென் சதுக்கம் படுகொலை பற்றியும், பெர்லின் சுவர் இடிப்பு பற்றியும், அந்தந்த நாடுகளுக்குச் சென்று, நிகழ்விடங்களில் நேராகப் பார்த்து செய்தி அறிக்கைகள் எழுதினார்.

ஆப்கானிசுத்தான், பாக்கித்தான், செருமனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார் . அடிப்படைவாதப் போர்களினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், அறைகூவல்கள் பற்றி இதழ்களில் எழுதினார்.

என்டிடிவி தொலைக் காட்சியில் வாக் தி டாக் என்ற நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்தியன் எக்சுபிரசில் வாரந்தோறும் நேசனல் இன்டரஸ்ட் என்ற பத்திக் கட்டுரை இவருக்குப் புகழைச் சேர்த்தது. அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் குறித்து சேகர் குப்தா எழுதிய நூலை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

விருதுகள்

[தொகு]
  • 1985 இன்லாக் விருது
  • ஜி.கே ரெட்டி விருது
  • பக்ருதீன் அலி அகமது நினைவு விருது
  • பத்ம பூசண் விருது-2009[2]

சான்றாவணம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_குப்தா&oldid=3246315" இலிருந்து மீள்விக்கப்பட்டது