சேகன் கருணாதிலக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேகன் கருணாதிலக

சேகன் கருணாதிலக  (Shehan karunatilaka)  என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஆங்கிலப் புதின எழுத்தாளர். இவர் எழுதிய சைனாமேன்: தி லெஜென்ட் ஆப் பிரதீப் மேத்தியூ  என்ற புதினத்திற்குக் காமன்வெல்த் புக் பரிசு கிடைத்தது.  [1]

வாழ்க்கைக்குறிப்புகள்[தொகு]

சேகன் கருணாதிலக இலங்கையில் கொழும்பில் பிறந்தார். இலங்கையில் கொள்ளுபிட்டியா பள்ளியிலும் பின்னர் நியூசிலாந்து  மெஸே பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

பணிகள்[தொகு]

சேகன் கருணாதிலக விளம்பரத்துறையில் பணி செய்தார்.  தி கார்டியன், நியூஸ்விக், நேஷனல் ஜாக்ராபிக்,  ரோலிங் ஸ்டோன், விஸ்டன், தி கிரிக்கட்டர், தி எக்கனாமிக் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

இவரது முதல் புதினம் பெயிண்டர் என்னும் பெயரில் வந்தது. 2000 ஆம் ஆண்டுக்குரிய கிரெடியான் பரிசு கிடைத்தது. 

இரண்டாவது புதினம்  சைனாமேன்: தி லெஜென்ட் ஆப் பிரதீப் மேத்யூ  கிரிக்கட் ஆட்டத்தைப் புனைவு செய்து இலங்கை சமூகத்தைப் பற்றி விவரிக்கிறது.[2] இந்தப் புதினத்திற்குக் காமன்வெல்த் புக் பரிசு, 2012 ஆம் ஆண்டு டி எஸ் சி பரிசு, 2008 ஆம் ஆண்டு கிரேடிங் பரிசு  ஆகியன கிடைத்தன. 2015 இல் சிங்கள மொழியில் இந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகன்_கருணாதிலக&oldid=2304355" இருந்து மீள்விக்கப்பட்டது