செ. ப. பன்னீர்ச்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. ப. பன்னீர்ச்செல்வம் (பிறப்பு: ஏப்ரல் 19 1948) தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த புக்கிட் பாஞ்சாங் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் தனது கல்வியைக் கற்று பின்னர் லிங்கன்சையர் ஹம்பர்சைட் பல்கலைக்கழகம், ஆக்லஹாமா நகர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிர்வாகத் துறையில் இளங்கலை சிறப்புப் பட்டத்தினையும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டத்தினையும் பெற்றார். மேலும் இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய் போன்ற மொழிகளில் நன்கு புலமைமிக்கவராவார்.

தொழில் நடவடிக்கைகள்[தொகு]

சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், ஆய்வாளராகவும், செய்தியாசிரியராகவும் தொழில்புரிந்துள்ளார். இவர் வானொலியில் பணியாற்றிய காலத்தில் முதன் முதலாக நாளும் ஒரு குறள் எனும் நிகழ்ச்சியைத் தயாரித்தளித்ததுடன் பல ஆண்டுகள் தேசியநாள் அணிவகுப்பை நேரடி வர்ணனை செய்தும் வந்தார். மேலும் 25 ஆண்டுகள் (1968 - 1993) தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.

செய்தியாசிரியர்[தொகு]

அங் மோ கியோ வசிப்போர் குழு வெளியிட்ட இதழின் (1980 - 1990) செய்தி ஆசிரியர்.

வகித்த பதவிகள்[தொகு]

பூன் லே இலக்கியக் குழுச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

சாருகேசி, ஸ்ரீநிதியதுநந்தனன், இடைக்காடன், செ.பக்கிரிசாமி, கோகுலபாரதி போன்ற புனைப்பெயர்களில் 1960ம் ஆண்டு தொடக்கம் எழுதிவரும் இவர் சிறுகதைகள், மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்துள்ளார். சுமார் 40 சிறுகதைகளையும், 30 நாடகங்களையும், 60 மரபுக் கவிதைகளையும், 50 புதுக் கவிதைகளையும், 2 நாவல்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான 'மாயா', சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பக வெளியீடாக 2014 ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. சிங்கப்பூர் இந்திய முன்னோடிகளைப் பற்றி சிங்கப்பூர் தங்கமீன் இணைய இதழில் இவர் எழுதிய தொடர், தற்போது 'சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள்' என்ற தலைப்பில் நூல்லாகிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது, அம்பியவாகர் எழுதிய ஆங்கில நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இலக்கிய நாடகங்கள், வாழ்க்கைப் பாதை நாடகங்கள் போன்றவற்றை வானொலிக்காக எழுதி, தயாரித்து ஒலிபரப்பியுமுள்ளார்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

தமிழ்ச்செல்வம் எனும் பட்டம்

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு