செ. கிருஷ்ணமுரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செ. கிருஷ்ணமுரளி
C Krishnamurali
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், கடையநல்லூர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2021
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பணி விவசாயம், அரசியல்

செ. கிருஷ்ணமுரளி (C. Krishnamurali)என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] கிருஷ்ணமுரளி தென்காசி மாவட்டம் செங்கோட்டையினைச் சார்ந்தவர். சங்கரன்கோயில் அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இக்கட்சியின் சார்பில் மே 2021இல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 கடையநல்லூர் திமுக 88474 43.08[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கிருஷ்ணமுரளி&oldid=3161659" இருந்து மீள்விக்கப்பட்டது