செ. கமலி
தோற்றம்
செ. கமலி (S. Kamali) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அவினாசி தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]இவர் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் பச்சமுத்து, இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு லியாழ் மித்ரா என்கிற ஒரு மகளும் உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 2026-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவினாசி தொகுதியிலிருந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
போட்டியிட்ட தேர்தல்கள்
[தொகு]| வருடம் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு சதவீதம் | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் |
|---|---|---|---|---|---|---|---|
| 2026 | அவினாசி | தவெக | வெற்றி | 36.36% | லோ. முருகன் | பா.ச.க | 29.72% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சதீஸ் ராமசாமி & ரமேஷ் கந்தசாமி (மே 6, 2026). "அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?". விகடன்.
- ↑ Krishnamoorthy, R. (2026-05-04). "TVK tastes victory in four out of eight constituencies in Tiruppur district" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/tvk-tastes-victory-in-four-out-of-eight-constituencies-in-tiruppur-district/article70939759.ece.