செ. கதிர்காமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. கதிர்காமநாதன் (1942 - 1972) ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, அறிமுகங்கள், இலக்கியக் குறிப்புக்கள் போன்றவற்றையும் எழுதிவந்தவர்.

யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி வேதாரணியேசுவரர் வித்தியாலயத்திலும், விக்னேசுவராக் கல்லூரியிலும் கல்வி கற்று 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இவரது முதற் சிறுகதைத் தொகுதி 'கொட்டும்பனி' 1968 இல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு இத்தொகுதிக்குக் கிடைத்தது. 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின் பின்னணியில் கிருஷ்ணசந்தரால் எழுதப்பட்ட உருது மொழி நாவலை கதிர்காமநாதன் "நான் சாகமாட்டேன்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். இப்புதினம் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கொட்டும் பனி
  • மூவர் கதைகள்
  • நான் சாகமாட்டேன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கதிர்காமநாதன்&oldid=856398" இருந்து மீள்விக்கப்பட்டது