செ. எ. ஆனந்தராஜன்
சி. ஈ. ஆனந்தராஜன் C. E. Anandarajan | |
---|---|
பிறப்பு | 31 சனவரி 1931 |
இறப்பு | 26 சூன் 1985 | (அகவை 54)
இறப்பிற்கான காரணம் | சுட்டுக் கொலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோப்பாய் கிறித்தவக் கல்லூரி பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்னை கிறித்துவக் கல்லூரி |
பணி | ஆசிரியர், அதிபர் |
செல்லையா எட்வின் ஆனந்தராஜன் (Chelliah Edwin Anandarajan (31 சனவரி 1932 - 26 சூன் 1985) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர்.[1] ஈழப் போரின் போது இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஆனந்தராஜன் 1932 சனவரி 31 இல் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்[2] கோப்பாய் கிறித்தவக் கல்லூரி அதிபர் ஜி. எஸ். செல்லையாவின் மூத்த மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறித்தவக் கல்லூரியிலும், பரி. யோவான் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2] பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி கற்று விலங்கியலில் பட்டம் பெற்றார்.[2]
ஆனந்தராஜன் பத்மா கதிர்காமர் என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள்.[2]
பணி
[தொகு]இளங்கலைப் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஆனந்தராஜன் 1955 மே மாதத்தில் பரி. யோவான் கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2][3] 1975 இல் துணை அதிபராகப் பதவி உயர்வு பெற்றார்.[3] 1976 மார்ச்சின் அதிபராகப் பதவியேற்று அப்பதவியில் 1985 சூன் மாதத்தில் இறக்கும் வரை தொடர்ந்தார்.[2][3]
படுகொலை
[தொகு]ஆனந்தராஜா 1985 சூன் 26 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] இலங்கை ஆயுதப் படைகளுடன் துடுப்பாட்ட நிகழ்வு ஒன்றை ஒழுங்கு படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History". பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம். Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 7.
- ↑ 3.0 3.1 3.2 "C.E.Anandarajan". Chundikuli St.John's Past Pupils Association. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-06-22.
- ↑ Gautamadasa, Aravinda (29 சூலை 2005). "Commemorating a slain principal". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2014-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140303092150/http://www.island.lk/2005/07/29/opinion5.html.
- ↑ "Remembering Former Principal St. John's College Jaffna: Reflections Of A Son". கொழும்பு டெலிகிராப். 22 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2015.