செஸ்டர் கிரீன்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஸ்டர் கிரீன்வுட்
Chester Greenwood
பிறப்புசெஸ்டர் கிரீன்வுட்
(1858-12-04)4 திசம்பர் 1858
ஃபார்மிங்டன், மைனே
இறப்பு5 சூலை 1937(1937-07-05) (அகவை 78)
ஃபார்மிங்டன், மேய்ன்
தேசியம்அமெரிக்கர்
கல்விPublic Farmington, ME schools and Wilton, ME Academy
பெற்றோர்ஜினா ஹைட் கிரீன்வுட் (தந்தை), கிரீன்வுட் (தாய்)
வாழ்க்கைத்
துணை
சாரா இசபெல் (விட்டியர்) கிரீன்வுட்
பிள்ளைகள்லெஸ்டர் கிளைட் கிரீன்வுட், டொனால்ட் விட்டீர் கிரீன்வுட், வோடிசா எமிலி (கிரீன்வுட்) மகூன், கிளிண்டன் விட்டர் கிரீன்வுட்
பணி
குறிப்பிடத்தக்க திட்டங்கள்காதுக் கவசம்

செஸ்டர் கிரீன்வுட் (Chester Greenwood, 4 திசம்பர் 1858 - 5 யூலை 1937) என்பவர் ஒரு அமெரிக்க பொறியாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1873 ஆம் ஆண்டில் காதுக் கவசத்தைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டார். [1] பனிச்சறுக்கின் போது இவருக்கு இந்த யோசனை வந்ததாக கூறப்படுகிறது. இவர் இரண்டு கம்பிகளை வட்டமாக வளைத்து தன் பாட்டியிடம் கம்பி வளையங்களுக்கு இடையில் கம்பளித் துணியும், மெல்லிய துணியையும் கொண்டு தைக்கச் சொன்னார். [2] பின்னர் இவர் இந்த காது கவசத்தை மேலும் மேம்படுத்தி காப்புரிமம் பெற்று, தயாரிக்கத் தொடங்கினார். இத்தொழிலில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஃபார்மிங்டன் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார். [1]

தொழில்[தொகு]

1873 ஆம் ஆண்டில், 15 வயதில், இவருக்கு புதிய பனிச்சருக்கு காலணி பரிசாக வந்தது. அதைக் கொண்டு தன் வீட்டருகே பனி உறைந்திருந்த குளத்தில் சறுக்கி விளையாட சென்றார். விளையாட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே குளிரில் இவரது காதுகள் விறைத்துவிட்டன. பின்னர் தலையை சுற்றி ஒரு ஒரு கம்பளித் துணியால் சுற்றிக் கொண்டு விளையாடப் போனார். ஆனால் இந்தமுறை கம்பளித் துணியை அணிய முடியாத அளவுக்கு காதுகளில் அரிப்பு ஏற்பட்டது. பின்னர், இரண்டு கம்பிகளை வட்டமாக வளைத்து ஒரு வடிவமைப்பைக் கொண்டுவந்தார். பின்னர் இவர் தனது பாட்டியிடம் அந்த வளையங்களில் கம்பளித் துணியைச் தைக்கச் சொன்னார். பின்னர் அதை அணிந்த போது தனது காதுகளை குளிரிலிருந்து சிறப்பாக காத்ததை உணர்ந்தார். மேலும் இந்த காதுகவசத்தின் கம்பியில் மாற்றங்கள் செய்து அதை மேலும் மேம்படுத்தினார். பின்னர் இவர் அந்த காதுகவசத்ததுக்கு "கிரீன்வுட்ஸ் சாம்பியன் இயர் புடொடக்டர்ஸ்" என்று பெயரிட்டு காப்புரிமை பெற்று விற்பனை செய்யத் துவங்கினார்.

மேலும் இவர் வட்டமான கீழ்பக்கம் உடைய கொதிகெண்டி, குடை வைக்கும் பை, கலைத்துக் கட்டும்படியான தற்காலிக வீடுகள், மடித்து வைக்கும் படுக்கை உள்ளிட்ட கண்டு பிடிப்புகளைச் செய்தார். [1] கிரீன்வுட் வைத்திருந்த காப்புரிமைகளின் மொத்த எண்ணிக்கையானது 100க்கும் மேல் இருக்கும் எனப்படுகிறது. [3]

இவர் ஃபார்மிங்டனில் முதல் தொலைபேசி அமைப்புகளில் ஒன்றை அறிமுகப்படுத்தினார். [4] இவர் ஒரு திறமையான இயந்திரப் பொறியாளராக இருந்தார். யூனிடேரியன் ஆலயத்தின் உறுப்பினர். இவரது மனைவி, இசபெல் (நீ விட்டியர்), பெண்கள் வாக்குரிமையை ஆதரிப்பவர். இவரும் இசபெலும் நான்கு குழந்தைகளின் பெற்றோராவர்.

செஸ்டர் கிரீன்வுட் நாள்[தொகு]

1977 ஆம் ஆண்டில், மேய்ன் மாநிலம் திசம்பர் 21 ஐ செஸ்டர் கிரீன்வுட் நாளாக அறிவித்தது. ஃபார்மிங்டன் திசம்பர் முதல் சனிக்கிழமையன்று "செஸ்டர் கிரீன்வுட் நாளாக" அனுசரித்து அவர் நினைவாக பொதுமக்கள் காதுக் கவசங்களை அணிந்துகொண்டு பேரணியில் கலந்துகொள்கின்றனர். [5] [6]

ஃபார்மிங்டனில் உள்ள செஸ்டர் கிரீன்வுட் இல்லம் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கபட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Maine Secretary of State Kid's Page - Famous People
  2. Dec. 4, 1858: It Was Very Cold the Day Chester Greenwood Was Born
  3. David Sharp, “[[David Sharp, “Maine Town Honoring Earmuff Inventor,” The Washington Post, December 1, 2007, sec. Nation, http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/12/01/AR2007120100561.html.%7CMaine[தொடர்பிழந்த இணைப்பு] Town Honoring Earmuff Inventor]],” The Washington Post, December 1, 2007.
  4. Ian M. G. Quimby. 1986. “Yankee Ingenuity Is Alive and Well in Maine: An Exhibition Review”. Review of Made in Maine; Made in Maine: An Historical Overview [exhibition Catalogue]. Winterthur Portfolio 21 (2/3): 186.
  5. Farmington honors earmuff inventor today Portland Press Herald, December 4, 2010
  6. Title 1, §117: Chester Greenwood Day
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஸ்டர்_கிரீன்வுட்&oldid=3726355" இலிருந்து மீள்விக்கப்பட்டது