செவ்விறகுக் குயில்
செவ்விறகுக் குயில் Chestnut-winged cuckoo | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | குயில் (குடும்பம்) |
குடும்பம்: | குயில் (குடும்பம்) |
பேரினம்: | Clamator |
இனம்: | C. coromandus |
இருசொற் பெயரீடு | |
Clamator coromandus (L., 1766) |
செவ்விறகுக் குயில் (chestnut-winged cuckoo or red-winged crested cuckoo (Clamator coromandus) என்பது ஒரு வகைக் குயில் ஆகும். இவை தென்கிழக்காசியாவிலும், தெற்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை இருண்ட பளபளப்பான மேற்பகுதியும், கருப்பு தலையையும், உச்சிக் குடுமி இறகுகளும், பாக்கு நிற இறக்கைகளும், பளபளப்பான நீண்ட வாலும் கொண்ட பறவையாகும். இவை இமயமலைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, குளிர் காலத்தில் தென்னிந்தியா முதல் இலங்கை, மற்றும் இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய வெப்பமண்டலப் பகுதிகளான தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.
இவ்வினப் பறவைகள் கிழக்கு இமயமலையில் இருந்து மேற்கு இமயமலைவரையும், தென்கிழக்கு ஆசியாவரையும் பரவியுள்ளன. குறிப்பாக இவை இந்தியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா, லாவோஸ், பூட்டான், வங்காளம், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், மலேசியா, வியட்நாம், இலங்கை பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2][3] வேறு சில இங்களிலும் இவை பரவி இருக்கலாம்.[4]
பெயர்கள்[தொகு]
தமிழில் :செவ்விறகுக் கொண்டைக் குயில்
ஆங்கிலப்பெயர் :Red-winged Crested Cuckoo
அறிவியல் பெயர் :Clamator coromandus [5]
உடலமைப்பு[தொகு]
47 செ.மீ. - சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு வெண்மை.
காணப்படும் பகுதிகள்[தொகு]
குளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது. கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் இதனைக் கோடிக்கரையில் கண்டதான குறிப்பு உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் காணப்பட்ட குறிப்பும் உள்ளது. இங்கு வலசை வரும்போது மௌனம் காப்பது இதன் வருகை மற்றும் காணப்படும் இடங்கள் ஆகியன பற்றிய முழுவிவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.
உணவு[தொகு]
தனித்தும் சிறு குழுவாகவும் உயர்மரக் கிளைகளிடையே காணப்படும். கம்பளிப் பூச்சிகளைத் தேடி உணவாகக் கொள்ளும் இது தரைக்கு வருவதில்லை.
படங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Chestnut-winged cuckoo videos, photos, and sounds at the Internet Bird Collection
- Audio recordings of Chestnut-winged cuckoo on Xeno-canto.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Clamator coromandus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Peters, JL (1940). Check-list of birds of the world. Volume 4. Harvard University Press, Cambridge. பக். 12. https://archive.org/stream/checklistofbirds41940pete#page/12/mode/1up.
- ↑ Baker, ECS (1927). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 4 (2 ). London: Taylor and Francis. பக். 170–171. https://archive.org/stream/BakerFbiBirds4/BakerFBI4#page/n199/mode/1up/.
- ↑ Friedmann, H (1964). Evolutionary trends in the avian genus Clamator. Smithsonian Miscellaneous Collection. Volume 146. Number 4. Smithsonian Institution. பக். 1–127. https://archive.org/stream/smithsonianmisce146196364smit#page/n143/mode/2up.
- ↑ "Chestnut-winged_cuckoo செவ்விறகுக் கொண்டைக் குயில்". 9 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:70