உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வியல் பழக்கமுறுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவ்வியல் பழக்கமுறுத்தல் (Classical conditioning also respondent conditioning and Pavlovian conditioning) என்பது பழக்கத்தினால் ஏற்படும் செயல் ஆகும். இதில் உயிரியல் ரீதியாக உடலியல் தூண்டுதலானது (எ.கா. உணவு) பொதுவான தூண்டலுடன் (எ.கா. மணி ஒலி) இணைக்கப்படுகிறது. இதில் பொதுவான தூண்டுதலினால் உடலியல் தூண்டுதல் (எ.கா. உமிழ்நீர் சுரத்தல்) ஏற்படுகிறது.

உருசிய உடலியங்கியல் நிபுணரான இவான் பாவ்லோவ், நாய்களிடம் நடத்திய விரிவான பரிசோதனைகள் மூலம் செவ்வியல் பழக்கமுறுத்தல் பற்றி ஆய்வு செய்தார். பின்னர் 1897 இல் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். செரிமானம் பற்றிய ஆய்வில், நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். [1] வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணவைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில் உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும் பத்திரத்தைப் பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.

பால்லோவ் இதன் தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம் பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும் உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறியது. இதன் முடிவில் அறிந்தோ அறியாமலோ இவ்வித செவ்வியல் பழக்குதல்கள் விலங்குகள், மனிதர்கள் வாழ்வில் இடம் பெற்று பாதக்கப்பட்டவர்களின் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது என்பது கண்டறியப்பட்டது.

செயல்முறைப் பழக்கமுறுத்தலுடன் சேர்ந்து, செவ்வியல் பழக்கமுறுத்தல் நடத்தையியலின் அடித்தளமாக மாறியது. இது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய உளவியல் துறையாகும். மேலும் உளச்சிகிச்சையின் நடைமுறையிலும் விலங்குகளின் நடத்தை பற்றிய ஆய்விலும் இன்னும் இது முக்கிய செல்வாக்கு செலுத்துவதாக உள்ளது. செவ்வியல் பழக்கமுறுத்தல் என்பது மனநல மருந்துகளுக்கு உடலின் எதிர்வினை, பசியைக் கட்டுப்படுத்துதல், கற்றல், நினைவாற்றலின் நரம்பியல் அடிப்படையிலான ஆய்வு போன்ற விசயங்களில் செல்வாக்கு செலுத்துகிறது. [2]

குறிப்புகள்

[தொகு]
  1. Coon, Dennis; Mitterer, John O. (2008). Introduction to Psychology: Gateways to Mind and Behavior. Cengage Learning. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780495599111.
  2. Tarantola, Tor; Kumaran, Dharshan; Dayan, Peter; De Martino, Benedetto (2017-10-10). "Prior preferences beneficially influence social and non-social learning" (in en). Nature Communications 8 (1): 817. doi:10.1038/s41467-017-00826-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-1723. பப்மெட்:29018195. Bibcode: 2017NatCo...8..817T.