செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் பட்டமாவிடுதி மற்றும் செவ்வாய்ப்பட்டி என்ற ஊரில் உள்ள ஓர் அம்மன் கோவில் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணம் அருகிலும் செவ்வாய்ப்பட்டி என்ற ஊரும் பத்ரகாளியம்மன் கோயிலும் உள்ளது. [1]

கோவில் அமைப்பு[தொகு]

பத்ரகாளியம்மன் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். இக்கோவிலில் வலது புறம் தீர்த்த குளம் உள்ளது. கோவிலைச்சுற்றி மரங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் அய்யனார், உருமர், பெரமர், சப்தகன்னிகள், பேச்சியம்மாள், ராகு மற்றும் கேது போன்ற தெய்வங்கள் அமைந்துள்ளன.

இக்கோவிலின் எதிர்புறம் கலையரங்கம் அமைந்துள்ளது.

பூசைகள்[தொகு]

பத்ரகாளியம்மனுக்கு சைவ முறையில் பூசை செய்யப்படுகிறது. அய்யனாருக்கு கிடா வெட்டி பூசை செய்கிறார்கள்.

வேண்டுதல்கள்[தொகு]

உடல் நலம் பெறவும், பெண்களின் திருமணம் நடைபெறவும் சப்த கன்னிகளிடம் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை வரம் வேண்டி பேச்சியம்மனை வழிபடுகின்றனர். இக்கோவிலைச் சுற்றி சிறுசிறு தெய்வங்கள் உள்ளன.

கோவில் திருவிழா[தொகு]

ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று பத்ரகாளியம்மனுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்கள் நடக்கின்றன.

குடமுழுக்கு[தொகு]

செவ்வாய்ப்பட்டி மக்களால் இக்கோவில் புரணமைக்கப்பட்டு, சனவரி 23, 2013 அன்று இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "3 பேருக்கு சோடாபாட்டில் குத்து". www.dailythanthi.com. 7 ஏப்., 2023. {{cite web}}: Check date values in: |date= (help)