செவ்வாய்ப்பட்டி
தோற்றம்
செவ்வாய்ப்பட்டி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622302 |
செவ்வாய்ப்பட்டி (Sevaipatty) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராகும். இது பிலாவிடுதி ஊராட்சியின் நிருவாகத்தின் கீழ் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், கறம்பக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 366 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பெயராய்வு
[தொகு]இந்த ஊர் பெயரானது செய்வாய்பட்டி என்ற பெயரின் திரிபாகும். செய்+வாய்+பட்டி என்ற சொற்களின் சேர்க்கையாக செய்வாய்பட்டி என்ற பெயர் உருவானது. இதில் செய் என்பதற்கு நிலம் என்றும், வாய் என்பதற்கு கால்வாய் என்றும், பட்டி என்பதற்கு சிற்றூர் என்பதும் பொருளாகும்.[2]