செவ்வாயின் நிறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வாயில் உள்ள ஒரு பாறை

செவ்வாய் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அதன் துரு போன்ற தூசி வளிமண்டலத்தின் மேலே வரை எழுந்துள்ளதன் காரணமாக சிவப்பு வண்ணத்தில்(Mars surface color is red) தோற்றமளிக்கிறது. அதை நெருங்கிப் போய் பார்க்கும் போது அந்த இடத்தின் கனிமங்களைப் பொறுத்து சில இடங்கள் தங்க நிறம், பழுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகிறது. ஆரம்ப மனித வரலாற்றில் செவ்வாயின் நிறத்தினைக் கொண்டு அதை மற்ற கிரகங்களிலிருந்து வேறுபடுத்தி, அதைப்பற்றி போர் நீதிக்கதைகளை புனைந்தார்கள். அதன் ஆரம்ப பெயர்களில் ஒன்று, ஹர் டிக்கேர், எகிப்திய மொழியில் சிவப்பான ஒன்று என்று பொருள். இந்திய ஜோதிடர்கள் இதனை வெறும் கண்களால் கண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு செவ்வாய் என பெயரிட்டனர். நவீன தளவுளவிகள், அதன் தரைப்பகுதி மட்டும் அல்ல, வானமும் சூரிய ஒளியில் சிவப்பு நிறத்துடன், செவ்வானமாகத்தான் இருக்கிறது எனக் கண்டறிந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாயின்_நிறம்&oldid=1658126" இலிருந்து மீள்விக்கப்பட்டது