செவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்)
செவன் இயர்ஸ் இன் திபெத் | |
---|---|
திபெத்தில் ஏழு வருடங்கள் பட உறை. | |
இயக்கம் | ஜான் ஜாக்குவஸ் அனௌட் |
தயாரிப்பு | ஜான் ஜாக்குவஸ் அனௌட் ஜயான் ஸ்மித் ஜான் எச்.வில்லியம்ஸ் |
கதை | ஹெயின்ரிச் ஹாரெர் (நூல்) பெக்கி ஜான்ஸ்டன் |
இசை | ஜோன் வில்லியம்ஸ் |
நடிப்பு | பிராட் பிட் டேவிட் தியூவ்லிஸ் |
விநியோகம் | TriStar Pictures |
வெளியீடு | அக்டோபர் 8, 1997 (அமெரிக்கா) |
ஓட்டம் | 139 நிமிடங்கள். |
மொழி | ஆங்கிலம் ஜேர்மன் மான்டரின் திபெத்தியன் |
ஆக்கச்செலவு | $70,000,000 US (est.) |
செவன் இயர்ஸ் இன் திபெத் (seven years in Tibet) இத்திரைப்படம் அதே பெயரில் 1957ல் வெளிவந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும் அதே சமயத்தில் ஹெயின்ரிச் ஹாரெரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புமாகும்.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஆஸ்திரியர்களான ஹாரெரும் அவரது நண்பருமான பீட்டர் ஆவ்ப்சினைட்டரும் இமாயலய மலைத்தொடரின் உச்சியினை அடையவிரும்பி இமயம் நோக்கி பயணிக்கின்றனர். அம்மலையின் உச்சியினை தொடாத வண்ணம் இருக்கையில் பிரித்தானிய அரசால் கைது செய்யப்படுகின்றனர். அதே சமயம் ஹெயின்ரிச் ஹாரெருக்கு அவரின் மனைவி அனுப்பிய கடிதத்தில் வேறொருவரை தான் மணம் செய்து கொள்வதாக ஓர் இடியினை அவர் தலையில் போட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர் ஹெயின்ரிச் ஹாரெர் மற்றும் பீட்டர் ஆவ்ப்சினைட்டரும் சிறையிலிருந்து வட இந்தியாவிற்குத் தப்பியோடுகின்றனர். இதற்கிடையில் பிரியும் இருவரும் இந்தியாவிலும் பிரித்தானிய அரசின் ஆட்சி என்று தெரிந்த பின்னால் சந்திக்கும் இவர்கள் திபெத்தில் புதியதொரு வாழ்வினை வாழ்கின்றனர். அங்கு 14 ஆம் தலாய் லாமாவின் நல்லாதரவைப் பெறும் இவர்களால் புத்தரின் கொள்கைகளின் மகிமைகளை அறிய முடிகின்றது. பின்னர் அங்கு ஏற்படும் சீனாவின் கம்யூனிச படையெடுப்பு காரணமாக சுமார் ஒரு மில்லியன் திபெத்திய மக்கள் அழித்தொழிக்கப்பட்டது வரலாறு. போர் ஓய்ந்தது மேலும் மன்னர் பதவியை 14ஆம் தலை லாமா பெறுகின்றார். ஆஸ்திரியாவிலிருக்கும் தனது மகனைக் காண்பதற்காக அங்கிருந்து விடை பெறுகின்றார் ஹெயின்ரிச் ஹாரெர்.
துணுக்குகள்
[தொகு]- இத்திரைப் படத்தில் தங்களைக் கொடூரமானவர்கள் என வர்ணனை செய்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் சீன அரசு இத்திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் மற்றும் டேவிட் தியூவ்லிஸ் ஆகிய நடிகர்கள் சீனாவிற்குள் நுழையவே கூடாதென சட்டம் இயற்றியமை குறிப்பிடத்தக்கது.