உள்ளடக்கத்துக்குச் செல்

செவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Seven
செவன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் பின்ச்சர்
தயாரிப்பு
  • அர்னால்ட் கோபெல்சன்
  • பில்லிஸ் கார்ல்
கதைஆண்ட்ரூ கெவின் வாக்கர்
கதைசொல்லிமார்கன் ஃப்ரீமேன்
நடிப்பு
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுசெப்டம்பர் 22, 1995 (1995-09-22)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுUS$30 மில்லியன்
மொத்த வருவாய்$327,311,859

செவன் (Seven) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கொடூர பாணியில் அமைந்த, நவீன இருண்ட வகை (Neo-noir) சார்ந்த அமெரிக்க திகில் திரைப்படம் ஆகும். இப்படமானது அன்ட்ரு வால்கர் என்பவரால் எழுதப்பட்டு, டேவிட் பிஞ்சர் என்பவரால் இயக்கப்பட்டு, நியூ லைன் சினிமா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மார்கன் ஃப்ரீமேன், பலமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட நடிகர் பிராட் பிட் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 22, 1995 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் $ 327 மில்லியன் வசூலித்தது சர்வதேச அளவில், இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பெரும்பாலான விமர்சகர்களிடமிருந்து மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

கதை[தொகு]

புதிதாக இடமாற்றம் பெற்ற கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அனுபவம் வாய்ந்த,விரைவில் ஓய்வு பெற உள்ள மூத்த அதிகாரி வில்லியம் சொமேர்செட் (மார்கன் ஃப்ரீமேன்)இருவரும் சேர்ந்து ஒரு தொடர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் சேர்ந்து செயற்படுகிறார்கள்.இக்கொலைகாரன் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற எழு கொடிய பாவங்களை செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்கிறான். இறுதியில் கொலைகாரனுக்கும் போலிஸ் அதிகாரிகளுக்கும் என்ன நடந்தது என்பது கதையின் முடிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவன்&oldid=3314816" இலிருந்து மீள்விக்கப்பட்டது