செல்வகேசவராய முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செல்வகேசவராய முதலியார் (1864 - 1921) என்பவர் பழமொழிகள் கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு ஆழமும் மெருகும் தந்தவர் ஆவார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழின் உரைநடை வளம் செழிக்க பாடுபட்டவர்களுள் ஒருவர் இவர்.

பிறப்பும் இளமையும்[தொகு]

சென்னைக்கு அருகிலுள்ள திருமணம் எனும் சிற்றூரில் 1864ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோர் கேசவ சுப்பராய முதலியார் - பாக்கியம். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் செல்வகேசவராயன் என்பதாகும். இவர் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போதே, தமிழை விருப்பப் பாடமாக ஏற்றுப் படித்தார். படிப்பின்போது ஆங்கில இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் ஒப்பீடு செய்து படித்தார். இருமொழி புலமைப்பெற்ற இவரைப் பச்சையப்பன் கல்லூரி ஆசிரியராக ஏற்றுக் கொண்டது. கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் பல திறமைமிக்க தமிழ் அறிஞர்களை உருவாக்கினார். இவர் உருவாக்கியவர்களுள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், ரா. பி. சேதுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பதிப்பித்த நூல்கள்[தொகு]

 • பழமொழி நானூறு
 • ஆசாரக்கோவை
 • அறநெறிச்சாரம்
 • முதுமொழிக்காஞ்சி
 • அரிச்சந்திரப் புராணம்

ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். பழமொழி எனும் நூலை அதிகார அடைவு செய்து பதவுரை சேர்த்துப் பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • கம்பநாடர்
 • வியாசமஞ்சரி
 • தமிழ்
 • அக்பர்
 • கண்ணகி கதை
 • திருவள்ளுவர்
 • இராபின்சன் குருசோ
 • மாதவ கோவிந்தரானடே
 • பஞ்ச லட்சணம். முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு[தொகு]

தமிழில் பெரும்புலமைப் பெற்றுத் திகழ்ந்த செல்வகேசவராயர் அவர்கள் 1921 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணைகள்[தொகு]

 • மு.வரதராசன், 'தமிழ் இலக்கிய வரலாறு'-சாகித்திய அகாதெமி வெளியீடு 1994, பக்கம் 322.
 • கழகப்பைந்தமிழ் இலக்கிய வரலாறு - திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகம் வெளியீடு.
 • குன்றக்குடி பெரியபெருமாள், 'தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்- மதிநிலையம்.