உள்ளடக்கத்துக்குச் செல்

செல்லி ஓபராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லி ஓபராய் (Shelly Oberoi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி மாநகராட்சியின் மாநகரத் தந்தையும் ஆவார்.[1]

பணி

[தொகு]

ஓபராய் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[2]கோழிக்கோடு இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மேலாண்மை,[3] ஜானகி தேவி நினைவுக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை [4] மற்றும் இமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் படிப்பினையும் படித்துள்ளார்.[5] தில்லி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமுடையவர்.[6] இவர் 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.[7] ஓபராய் 2022 தில்லி மாநகராட்சி தேர்தலில் பட்டேல் நகர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள பகுதி 86-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8] 23 திசம்பர் 2022 அன்று, இவர் மாநகரத் தந்தை வேட்பாளராக ஆனார்.[9] ஒரு சில சட்டப் பிரச்சனைகள் காரணமாக நடைபெற்ற வழக்குகள் 2023 பிப்ரவரி 23-ல் முடிவுக்கு வந்ததன் அடிப்படையில் ஓபராய் மாநகரத்தந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prakash, Karam. "AAP wins Delhi mayoral poll; Shelly Oberoi elected mayor". The Tribune India.
  2. Roy, Snehashish (2022-12-23). "AAP's Shelly Oberoi is new Delhi mayor. 5 things to know about her". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  3. Chaturvedi, Amit. "Shelly Oberoi: 5 Points On AAP Leader Elected Delhi Mayor". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  4. Paliwal, Aishwarya (2023-02-22). "कौन हैं AAP की शैली ओबेरॉय? MCD में 15 साल से काबिज BJP को किया बाहर". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  5. Teotia, Riya. "Who is Shelly Oberoi? New mayor of Delhi who won the MCD elections from Aam Aadmi Party". WION News. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  6. Pathak, Analiza. "AAP's Shelly Oberoi Is The New Mayor Of Delhi; Who Is She?". Zee Media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. Singh, Rakesh (2023-02-22). "दिल्ली की मेयर शैली ओबरॉय कौन हैं? पढ़ाई-लिखाई से सियासी लड़ाई तक, जानें 'कुंडली'". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  8. Basnet, Radha (2023-02-22). "Meet Shelly Oberoi, The Professor-Turned-Politician, Elected As Delhi's New Mayor". Dainik Jagran (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  9. Jain, Pankaj. "Shelly Oberoi named Delhi Mayor candidate of AAP". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  10. ""Goons Have Lost": AAP's Dig At BJP As Shelly Oberoi Elected Delhi Mayor". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லி_ஓபராய்&oldid=3664011" இலிருந்து மீள்விக்கப்பட்டது