உள்ளடக்கத்துக்குச் செல்

செல்லாத பணம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லாத பணம்
நூல் பெயர்:செல்லாத பணம்
ஆசிரியர்(கள்):இமையம்
வகை:புதினம்
துறை:தமிழிலக்கியம்
மொழி:தமிழ்
பதிப்பகர்:க்ரியா வெளியீடு

செல்லாத பணம், 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும்.[1][2] இந்நாவல் தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட எழுத்தாளர் வெ.அண்ணாமலை என்னும் இயற்பெயருடைய இமையம் என்பவரால் எழுதப்பட்டதாகும்.[3] க்ரியா பதிப்பகம் இப்புதினத்தை வெளியிட்டது.

கதைக்களம்

[தொகு]

ரேவதி தனது வர்க்கத்திற்கும் குறைவான பர்மா அகதியான ரவியை பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்கு பின்னர் ரேவதியின்  வாழ்க்கையில், ரவியின் எதற்கும் கட்டுப்படாத ஒழுக்கமற்ற நடத்தையும், அவனது குடிப்பழக்கமும், அவனது ஆணாதிக்க சந்தேக பார்வையும், ஒடுக்குமுறையும் ரேவதியின் வாழ்க்கையை சீர்குலைக்க ஆரம்பிக்கிறது.

ரவியின் கொடுமைகளும் ,வறுமையும், பெற்றோர்களின் ஒதுக்குதலும் ரேவதிக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்குகிறது. தனது பொறியியல் பட்டப்படிப்பு வைத்து நல்ல வேலைக்குச் சென்று தன் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்றலாம் என நினைத்த ரேவதியின் கனவு சுக்குநூறாகின்றது.தனது மகளின் வாழ்க்கை இப்படி சீர்குலைந்து விட்டது என்று நினைத்து ரேவதியின் தாய் கலங்குகிறாள். கேட்கும் போதெல்லாம் ஏதாவது பண உதவி  செய்கிறாள். இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும் ரவி திருந்த மறுக்கிறான். தன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்த தானுந்து வாகனத்திற்கு கட்ட வேண்டிய தவணைத்  தொகையை எடுத்து குடித்துவிட்டு வருகிறான் ரவி.

'நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்' என்று ரவியின் ஒரு சொல்லிற்கு பின்னரே தன் வாழ்க்கையை அவனுக்கு ஒப்படைத்த ரேவதி. 'சாகிறாது என்றால் போய் சாவு' என்ற ரவியின் ஒற்றைச் சொல்லைக் கேட்டு செத்து போக முடிவு செய்கிறாள்.பின்னர் 80 சதவிகித தீக்காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் தீ விபத்து பிரிவில் சேர்க்கப்படுகிறாள் ரேவதி.தகவல் தெரிந்து ரேவதியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். ரேவதியின் தந்தை பையில் பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவரிடம் எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என் பெண்ணைக் காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார். மருத்துவர் 'இந்த பணம் இப்போ செல்லாத பணம்' என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார்.

செல்லாத பணம் நாவலின் வாயிலாக பண்பாட்டு சீரழிவுகள் சாதிய ஒடுக்குமுறைகள்,வர்க்க வேறுபாடுகள்,கல்வித்தகுதி வாழ்க்கையில் ஏத்தகைய சிக்கல்களைத் தோற்றுவிகிறது போன்ற நிகழ்கால சமூக எதார்த்தத்தை உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லாத_பணம்_(புதினம்)&oldid=4194909" இலிருந்து மீள்விக்கப்பட்டது