செல்லப்பெட்டி
Jump to navigation
Jump to search
செல்லப்பெட்டி அல்லது வெற்றிலைச் செல்லம் (Betel container) என்பது தமிழகத்திலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழக்கமாக தாம்பூலம் தரிக்கும் வழக்கம் கொண்டவர்கள் வைத்திருக்கும் வெற்றிலைப் பெட்டியாகும். இந்தச் செல்லப்பெட்டியானது தகரத்தாலோ, பித்தளையாலோ, வெள்ளியாலோ பனையோலையாலோ[1] செய்யப்பட்டதாக அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்தது இருக்கும். இந்தச் செல்லப் பெட்டியில் பாக்குகளையும், சுண்ணாம்புக் கூட்டையும் வைக்க என்று தனியே ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையை மூடவும், திறக்கவும் ஒரு கதவும் இருக்கும். வெற்றிலைப் பிரியர்கள் எங்கு சென்றாலும் முதலில் இந்தச் செல்லப்பெட்டி நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு செல்வர்.
இதையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ காட்சன் சாமுவேல் (2018 ஆகத்து 25). "வெற்றிலைப் பெட்டி". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 30 ஆகத்து 2018.