செல்லப்பிள்ளா சத்யம்
செல்லப்பிள்ளா சத்யம் | |
---|---|
இயற்பெயர் | செல்லப்பிள்ளா சத்யநாராயணா |
பிறப்பு | 1933 ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | சனவரி 1989 (அகவை 55–56) |
தொழில்(கள்) | இசை இயக்குநர் |
இசைக்கருவி(கள்) | தோலக், கைம்முரசு இணை |
இசைத்துறையில் | 1960கள் – 1980கள் |
செல்லப்பிள்ளா சத்யநாராயண சாஸ்திரி (Chellapilla Satyanarayana Sastry) (1933 - 12 சனவரி 1989) செல்லப்பிள்ளா சத்யம் எனவும் அழைக்கப்படும் ஒரு இந்திய இசை இயக்குனர் ஆவார். [1] இவர் 1960கள் 1980களில் தெலுங்குத் திரைப்படத்துறை மற்றும் கன்னடத் திரைப்படத்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். பிரபல கன்னடப் படமான ஸ்ரீ ராமாஞ்சநேய யுத்தா என்ற படத்தின் மூலம் இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் அவர்களால் திரைப்படங்களில் அறிமுகமானார். இவர், "ஆந்திர ஆர்.டி.பர்மன்" என்று சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். [2] ஒரு சில பெங்காலி, போச்புரி, பாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் குணனுபுரம் கிராமத்தில் பிறந்தார். பிரபல எழுத்தாளர் இராஜஸ்ரீ மற்றும் வேறு சிலருடன் அங்கு சில நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் பி. ஆதிநாராயண ராவ் , டி. வி. ராஜு ஆகியோரின் கீழ் இசைக்குழுவில் பணியாற்றிய சென்னைக்கு வந்தார் .
தொழில்
[தொகு]இவர் சுவர்ண சுந்தரி (1957) என்ற படத்தில் உதவி இசையமைப்பாளராக இருந்தார். முழு இசை இயக்குனராக இவரது முதல் படம் 1967ஆம் ஆண்டில் வெளியான பாலாமனசுலு என்ற படமாகும். இருப்பினும் 1963ஆம் ஆண்டில் என். டி. ராமராவின் சவதி கொடுக்கு படம் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.
இவரது மறக்கமுடியாத தெலுங்கு பாடல்களில் யே திவிலோ விரிசினா பாரிஜாதாமோ, குன்னா மாமிடி கொம்மா மீதா, ஓ பங்காரு ரங்குலா சிலக்கா, கலிசே கல்ல லோனா, புச்சே புலா லோனா, தொலி வலேப்பே தீயானிதி, மதுமசா வேலலோ, குரிச்சிந்தி வான போன்றவை ஒரு சில [3]
சுதிகாடு படத்தின் இசை இயக்குனர் ஸ்ரீ வசந்த் அவரது பேரன்.
இறப்பு
[தொகு]இவர், 1989 சனவரி 12 அன்று காலமானார். 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தெலுங்கு மக்கள் சங்கமும், சிமாட்டா இசை நிறுவனமும் சேர்ந்து இவரது நினைவாக இசை இரவு ஒன்றை ஏற்பாடு செய்தன. [4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Satyam review at Chimata Music.com". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.
- ↑ "Rememberring Music Director Satyam". TeluguCinema.Com. Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
- ↑ "Some of the best songs of Satyam at Cineforks.com". Archived from the original on 25 August 2009. பார்க்கப்பட்ட நாள் 19 February 2010.
- ↑ Satyam Musical night in Bayarea, CA பரணிடப்பட்டது 15 மே 2009 at the வந்தவழி இயந்திரம்