செல்லத்துரை சுதர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செல்லத்துரை சுதர்சன் இலங்கைத் தமிழ் கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளரும் ஆவார். குடியேற்றக் கால இலங்கையின் இலக்கிய ஆவணங்களைத் தேடியெடுத்துப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். மறுமலர்ச்சி இதழ்களைத் தேடியெடுத்து அவ்விதழில் வெளிவந்த கவிதைகளைப் பதிப்பித்துள்ளார்.[1] முழுமை பெறாதிருந்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் எழுதிய பிரபந்தங்களைக் கண்டுபிடித்துப் பெருந்திரட்டாகத் தொகுத்துள்ளார்.[2]

கல்வி[தொகு]

இவர் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வசாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வசாவிளான் றோமன் கத்தோலிக்கக் கல்லூரியில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்றார். இடைநிலை, உயர்நிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புத் துறையாகப் பயின்று இளங்கலைப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் உடுப்பிட்டியில் வசித்து வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.[3]

எழுதிய நூல்கள்[தொகு]

 • மற்றுமொருமாலை - கவிதைத் தொகுப்பு, 2004, ஏகலைவன் வெளியீடு, உடுப்பிட்டி.
 • செம்புலம் - கலை இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், 2006, கிறிப்ஸ் பிறின்டர்ஸ், கொழும்பு.
 • யாப்பிலக்கணம் - 2011, திருவடி வெளியீடு, கொழும்பு.

பதிப்பித்த நூல்கள்[தொகு]

 • உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டு (பதிப்பு : கா. நீலகண்டன், செ. சுதர்சன்) புலவரில்லம், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம். ISBN :9789555004428
 • என் தேசத்தில் நான் – கவிதைகள், 2004, மல்லிகைப் பந்தல், கொழும்பு.
 • மறுமலர்ச்சிக் கவிதைகள், 2006, கிறிப்ஸ் பிறின்டர்ஸ், கொழும்பு.
 • நடராஜ தரிசனம், 2006, உடுப்பிட்டி அமரிக்கன் மிசன் கல்லூரி: க. நடராசா மணிவிழா வெளியீடு.
 • சாதலும் புதுவதன்றே (கவிதைகள்), 2010, யாழ்ப்பாணம்: அமரர் கு.குணசிங்கம் ஞாபகார்த்த வெளியீடு.
 • ஒளவை அமுது (ஆத்திசூடி, கொன்றைவேந்தன் மூலமும் ஆறுமுகநாவலர் உரையும்), 2011, உடுப்பிட்டி: அமரர் சற்குணதேவி நினைவு வெளியீடு.
 • சிவசம்புப்புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு 2014, புலவர் இல்லம், உடுப்பிட்டி.
 • புலவர்மணி நீலகண்டனின் கந்தவன மணிமாலை, 2015, பொலிகண்டி: கந்தவனம் கல்யாணவேலவ சுவாமி தேவஸ்தானம்.
 • பறாளை விநாயகர் பள்ளு 2015, சுழிபுரம்: அமரர் சண்முகநாதன் நினைவு வெளியீடு.
 • ஞானகுரு (புலவர்மணி நீலகண்டன் பற்றிய கட்டுரைகள்), 2015, உடுப்பிட்டி: புலவர் இல்லம்.

பாடலாசிரியர்[தொகு]

 • லெனின் எம். சிவம் இயக்கிய 1999 என்ற திரைப்படத்திற்கு மொழியின்றி விரிகின்ற..., '‘மலரே… ஆகிய இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
செல்லத்துரை சுதர்சன் எழுதிய
நூல்கள் உள்ளன.