செலெசுடெ பாரன்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலெசுடெ பாரன்சுகி
2013 ஆம் ஆண்டில் செலெஸ்டே பாரன்ஸ்கி
பிறப்பு1957
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
பணிமின்னணுவியல் பொறியாளர், தொழில் முனைவோர், செயல் அலுவலர்

செலெசுடெ பாரன்சுகி (Celeste Suzanne Baranski) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மின்னணுவியல் பொறியாளர் ஆவார். புதுமைகளைப் புகுத்துவதில் வல்லவர். தற்பொழுது உள்ள டேப்லெட் போன்ற முன்னோடி மின்னணு சாதனங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தவர். இவருக்கும் இவருடைய கல்லூரி நண்பரான அலைன் ரோசுமானுக்கும் 1998 ஆம் ஆண்டு புதுமைக்கான விருது கிடைத்தது.[1][2][3]

கல்வி[தொகு]

பாரன்ஸ்கி 1975 ஆம் ஆண்டில் இசுட்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கேயே மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை பயின்றார்.

பணி[தொகு]

1980ஆம் ஆண்டில் படிப்பை முடித்த பிறகு ஆர் ஓ எல் எம், கிரிட் மற்றும் சுனாமி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனங்களில் 1986 வரை பணியாற்றினார். 1987ஆம் ஆண்டில் ஜி ஓ நிறுவனத்தில் ஒரு நிறுவனராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அங்கு இ ஓ பர்சனல் கம்யூனிகேட்டர் என்ற கருவியை கண்டு பிடித்தார். [4]இங்கு 1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட மனக்கசப்பினால் வேறு நிறுவனத்திற்கு மாறினார். பல போராட்டங்களுக்கு பிறகு வைட்டமின் டி வீடியோவை மெஷின் விஷன் கம்பெனியில் பணியாற்றும்போது கண்டுபிடித்தார். பின்பு அங்கேயே 2006 முதல் 2010 வரை தலைமை நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார். 2010 முதல் 2014 வரை மூத்த துணைத் தலைவராக பொறியியல் பிரிவில் பன்ஸாஸ் என்ற நிறுவனத்தில் பணி புரிந்தார். 2014 முதல் நியூமண்டாவில் உள்ள ஹாக்கின்ஸ் மெஷின் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1993 Discover Awards: Winner: Personal Communicator: Celeste Baranski & Alain Rossmann, EO". Discover Magazine. 1993-10-01. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
  2. Vare, Ethlie Ann; Ptacek, Greg (2002). Patently female: from AZT to TV dinners : stories of women inventors and their breakthrough ideas. Wiley. பக். 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-02334-0. https://books.google.com/books?id=9yjbAAAAMAAJ&q=baranski. 
  3. Friedrich, Nancy (2011-05-18). "Women in Microwaves". Microwaves and RF. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10. ...Celeste Baranski developed an integrated cellular phone, facsimile (fax), and pen input device in 1993. This device became the basis for many personal digital assistants (PDAs).
  4. Kaplan, S. Jerrold (2014-07-08). "Startup: A Silicon Valley Adventure" (in ஆங்கிலம்). Houghton Mifflin Harcourt. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலெசுடெ_பாரன்சுகி&oldid=2954957" இலிருந்து மீள்விக்கப்பட்டது