உள்ளடக்கத்துக்குச் செல்

செலூக்கஸ் நிக்காத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செலுக்கஸ் நிக்கோடர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செலூக்கஸ் நிக்காத்தர்
செலூக்கியப் பேரரசர்
செலூக்கியப் பேரரசின் முதலாம் செலூக்கசு நிக்காத்தரின் உருவச்சிலை
ஆட்சிக்காலம்305[1]–281 BC
முன்னையவர்பேரரசர் அலெக்சாந்தர்
பின்னையவர்முதலாம் அந்தியோசூஸ் சோத்தர்
பிறப்புகி மு 358
மாசிடோனியா
இறப்புகி மு 281 (76/77-வது வயதில்)
திராசு (Thrace)
துணைவர்சோக்தியானாவின் அபாமா
சிரியாவின் சிடாடோனிசு
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் அந்தியோக்கசு சோத்தர்
அசாயுசு
வம்சம்செலூக்கிய வம்சம்
தந்தைஆண்டியோக்கசு
தாய்மாசிடோனியாவின் இலாடைசு
மதம்பண்டைய கிரேக்க சமயம்

முதலாம் செலூக்கசு நிக்காத்தர் (Seleucus I Nicator) பண்டைக் கிரேக்கம்Σέλευκος Νικάτωρ (கி மு 358 – 281) அலெக்சாண்டரின் குடும்ப உறுப்பினரும், நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவருமாவார். கி மு 323 இல் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், அவர் கைப்பற்றிய பகுதிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஏகியன் கடலுக்குக் கிழக்கே சிரியா முதல் தற்கால இந்தியாவின் பஞ்சாப் வரை உள்ள பகுதிகளுக்கு செலூக்கியப் பேரரசிற்கு செலூக்கசு நிக்காத்தர் மன்னரானார்.

சந்திர குப்த மௌரியர் மீதான இரண்டு ஆண்டு காலப் போரின் (கி மு 305-303) முடிவில், செலூக்கசு நிக்கோடர், சந்திரகுப்த மௌரியருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சிந்து ஆற்றுச் சமவெளியின் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சந்திர குப்த மௌரியருக்கு வழங்கியதுடன், தனது மகளை சந்திரகுப்தருக்கு மணமுடித்து வைத்தார். சந்திரகுப்த மௌரியர், செலூக்கசு நிகோடருக்கு ஐந்நூறு போர் யானைகளைப் பரிசாக வழங்கினார். மேலும் சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலூக்கியப் பேரரசர் தனது தூதுவராக மெகசுதெனசை நியமித்தார்.[2]

கி மு 281-இல் திராசு நகரத்தில் செலுக்கசு நிக்கோடர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மகன் முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் செலுக்காசியப் பேரரசின் மன்னரானார்.

தலைநகரங்கள்

[தொகு]

செலூக்கியப் பேரரசின் தலைநகரங்களாக துருக்கிசிரியாவின் எல்லையில் அமைந்த அந்தியோக்கியா மற்றும் டைகிரிசு ஆற்றாங்கரையில் அமைந்த செலுசியா நகரங்கள் விளங்கியது.

செலூக்கசு நிகோடர் ஆண்ட பகுதிகள்

[தொகு]

செலூக்கசு நிகோடரும், அவருக்குப் பின்வந்த கிரேக்க செலூக்கசு நிக்கோடரின் மரபினரும், செலூக்கசியப் பேரரசின் தற்கால பாக்கித்தான், ஆப்கானித்தான், துருக்குமேனித்தான், தசிகித்தான், உசுபெக்கித்தான், சிரியா, ஈரான், ஈராக்கு, குவைத்து, சவுதி அரேபியா, சிரியா, இசுரேல், பாலத்தீனம், சோர்தான், லெபனான், துருக்கி ஆகிய பகுதிகளை ஆண்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Boiy "The Reigns of the Seleucid Kings According the Babylonian King List." Journal of Near Eastern Studies 70(1) (2011): 1-12.
  2. Strabo 15.2.1(9)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seleucus I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலூக்கஸ்_நிக்காத்தர்&oldid=3833206" இலிருந்து மீள்விக்கப்பட்டது