உள்ளடக்கத்துக்குச் செல்

செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலீனைடு (Selenide) என்பது செலீனியம் −2 என்ற ஆக்சிசனேற்ற எண்ணில் காணப்படும் வேதிச் சேர்மங்களைக் குறிக்கும். சல்பைடுகளைப் போலவே, செலீனைடுகளும் கனிமச் சேர்மங்களாகவும், கரிம வழிப்பொருட்களாகவும் காணப்படுகின்றன. இந்த கரிம வழிப்பொருட்கள் கரிமசெலீனியம் சேர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கனிம செலீனைடுகள்

[தொகு]
காட்மியம் செலீனைடு நிறமியின் மாதிரி

இதன் மூல கனிம செலீனைடு ஐதரசன் செலீனைடு (H₂Se) ஆகும். ஐதரசன் செலீனைடு நிறமற்ற, துர்நாற்றம் வீசும், நச்சுத்தன்மை வாய்ந்த வாயுவாகும். நீர்க்கரைசலில் கரைந்து, ஐதரசன்செலீனைடு அயனி அல்லது பைசெலீனைடு அயனியை (HSe⁻) உருவாக்கும். அதிக காடித்தன்மை சுட்டெண் (pH) மதிப்பில், செலீனைடு உருவாகிறது. ஐதரசன் செலீனைடு மற்றும் செலீனைடு கரைசல்கள் காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து தனிமநிலை செலீனியத்தைத் தருகின்றன.

2 SeH− + O2 → 2 Se + 2 OH

பெரும்பாலான தனிமங்கள் செலீனைடுகளை உருவாக்குகின்றன. அவை சில சமயங்களில் உப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக சோடியம் செலீனைடு; ஆனால் பெரும்பாலானவை சகப்பிணைப்பைக் கொண்டுள்ளன. உதாரணமாக மாலிப்டினம் டைசெலீனைடு. இவற்றின் பண்புகள் மாறுபட்டவையாக உள்ளன. இது தொடர்புடைய சல்பைடுகளின் மாறுபட்ட பண்புகளைப் பிரதிபலிக்கிறது.

ஆண்டுதோறும் சில ஆயிரம் டன்கள் மட்டுமே செலீனியம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதிலிருந்து, செலீனைடுகள் எனப்படும் செலீனியம் சேர்மங்களின் துணைக்குழுவிற்குப் பயன்பாடுகள் குறைவாகவே உள்ளன என்பது தெளிவாகிறது. வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது துத்தநாக செலீனைடு ஆகும். இது சில அகச்சிவப்பு ஒளியியல் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்மியம் செலீனைடு ஒரு நிறமி ஆகும், ஆனால் சுற்றுச்சூழல் காரணங்களால் இதன் பயன்பாடு குறைந்து வருகிறது. தாமிரம் இண்டியம் செலீனைடு (CuInSe2) ஒளிமின்னழுத்த சாதனங்களுக்கு கவர்ச்சிகரமான ஆற்றலைக் கொண்டிருந்தாலும், இந்த பயன்பாடுகள் பரவலாகச் செயல்படுத்தப்படவில்லை.[1] இதேபோல், உலோக செலீனைடுகளை அடிப்படையாகக் கொண்ட குவாண்டம் புள்ளிகள் அவற்றின் தனித்துவமான நிறமாலை பண்புகளுக்காக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. [2] காட்மியம் சல்பைடு மற்றும் செலீனைடின் உள்ளக-கூடு கலப்புலோகங்கள் படமெடுத்தல் மற்றும் ஒளிச்சிகிச்சைத் துறைகளில் ஆர்வம் காட்டத்தக்கவையாக உள்ளன.[3]

பல செலீனைடு கனிமங்கள் அறியப்பட்டுள்ளன. பொதுவாக, பல சல்பைடு கனிமங்களில் சல்பைடிற்குப் பதிலாக செலீனியம் பகுதி அளவு இடம்பெறுகிறது. இந்த பதிலீட்டின் அளவு தாமிர சல்பைடு தாதுக்களில் மட்டுமே வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தகைய சந்தர்ப்பங்களில், செலீனியம் தாமிரம் சுத்திகரிப்பின் ஒரு துணைப் பொருளாக மீட்டெடுக்கப்படுகிறது. பெரோசெலைட்டு மற்றும் உமாங்கைட்டு ஆகியவை சில செலீனைடு கனிமங்களில் அடங்கும்.[4]

கரிம செலீனைடுகள்

[தொகு]

செலீனைடுகள் கரிம வேதியியலிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. கரிம சல்பைடுகளைப் போலவே, இவற்றிலும் இரண்டு Se-C பிணைப்புகள் உள்ளன. டைமெத்தில் செலீனைடு, செலீனோமெத்தியோனின் மற்றும் Se-மெத்தில்செலினோசிசுட்டீன் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இத்தகைய சேர்மங்களுக்குப் பயன்பாடுகள் மிகக் குறைவு.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Larson, Daniel R.; Zipfel, Warren R.; Williams, Rebecca M.; Clark, Stephen W.; Bruchez, Marcel P.; Wise, Frank W.; Webb, Watt W. (2003-05-30). "Water-Soluble Quantum Dots for Multiphoton Fluorescence Imaging in Vivo" (in en). Science 300 (5624): 1434–1436. doi:10.1126/science.1083780. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:12775841. Bibcode: 2003Sci...300.1434L. 
  2. Larson, Daniel R.; Zipfel, Warren R.; Williams, Rebecca M.; Clark, Stephen W.; Bruchez, Marcel P.; Wise, Frank W.; Webb, Watt W. (2003-05-30). "Water-Soluble Quantum Dots for Multiphoton Fluorescence Imaging in Vivo" (in en). Science 300 (5624): 1434–1436. doi:10.1126/science.1083780. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:12775841. Bibcode: 2003Sci...300.1434L. 
  3. Hessel, Colin M.; Pattani, Varun P.; Rasch, Michael; Panthani, Matthew G.; Koo, Bonil; Tunnell, James W.; Korgel, Brian A. (2011-06-08). "Copper Selenide Nanocrystals for Photothermal Therapy". Nano Letters 11 (6): 2560–2566. doi:10.1021/nl201400z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1530-6984. பப்மெட்:21553924. Bibcode: 2011NanoL..11.2560H. 
  4. Langner, Bernd E. (2000). "Selenium and Selenium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a23_525. ISBN 3527306730.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனைடு&oldid=4449351" இலிருந்து மீள்விக்கப்பட்டது