செலீனா கோமசு
செலீனா கோமசு | |
---|---|
![]() 2024 இல் கோமசு | |
பிறப்பு | செலீனா மேரி கோமசு சூலை 22, 1992 கிராண்சு பிரையரு, டெக்சாசு |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
அமைப்பு(கள்) | ரேர் பியூட்டி |
துணைவர் | பென்னி பிளான்கோ (2023–தற்போதுவரை, engaged) |
கையொப்பம் | ![]() |
வலைத்தளம் | |
selenagomez |
செலினா மேரி கோமசு ( /səˈliːnə ˈɡoʊmɛz/ sə-LEE-nə-_-GOH; பிறப்பு சூலை 22, 1992) ஓர் அமெரிக்க நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் ஆவார். ஒரு குழந்தை நடிகையாகத் தனது தொழில் வாழ்க்கையினைத் தொடங்கினார். குழந்தைகள் தொலைக்காட்சித் தொடரான பார்னி & பிரண்ட்ஸில் (2002–2004) அறிமுகமானார், மேலும் டிஸ்னி சேனல் சிட்காம் விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸில் (2007–2012) அலெக்ஸ் ரரூசோவாக நடித்ததன் மூலம் பதின்பருவத்தினரின் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் ஹாலிவுட் ரெக்கார்ட்சுடன் கையெழுத்திட்டு, செலினா கோம்ஸ் & தி சீன் என்ற இசைக்குழுவை உருவாக்கினார். இது, கிஸ் & டெல் (2009), எ இயர் வித்தவுட் ரெயின் (2010), வென் தி சன் கோஸ் டவுன் (2011) ஆகிய வெற்றிகரமான மூன்று பாடல் தொகுதிகளை வெளியிட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]செலினா மேரி கோம்சு சூலை 22, 1992 இல் டெக்சாஸின் கிராண்ட் பிரேரியில் [2] ரிக்கார்டோ ஜோயல் - கோமசு மாண்டி டீஃபி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாய் மேனாள் மேடை நடிகையாவார்.[3][4]1995 ஆம் ஆண்டு இறந்த தேஜானோ பாடகி செலினா குயின்டனிலாவின் நினைவாக இவருக்குப் பெயரிடப்பட்டது.[5][6] இவரது தந்தை மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்தவராவார். தத்தெடுக்கப்பட்ட இவரது தாயார் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். [7] [8] [9] கோமசின் தந்தைவழி தாத்தா பாட்டி 1970களில் மெக்சிகோவின் மோன்டெர்ரியிலிருந்து டெக்சாசுக்கு குடிபெயர்ந்தனர்.[10] கோமசு தான் "மூன்றாம் தலைமுறை அமெரிக்க-மெக்சிகன்" என்று கூறியுள்ளார் [11]
தொழில் வாழ்க்கை
[தொகு]2002-2006
[தொகு]தனது தாய் மேடை நடிப்பிற்க்காகத் தயாராவதைப் பார்த்த இவருக்கும் நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. [12] 2002 ஆம் ஆண்டில், குழந்தைகள் தொலைக்காட்சித் தொடரான பார்னி & பிரண்ட்ஸில் [13] [14] ஜியானா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்
பார்னி & பிரண்ட்சசில் பணிபுரியும் போது, கோமசு ஸ்பை கிட்ஸ் 3-டி: கேம் ஓவர் (2003) , தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர்: டிரையல் பை ஃபயர் (2005) ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். [15] [16] டிஸ்னி சேனல் தொடரான தி சூட் லைஃப் ஆஃப் ஜாக் & கோடியின் 2006 தொடரில் கௌரவ வேடத்தில் நடித்தார். [17] [16]
2007-2012
[தொகு]2007 ஆம் ஆண்டு டிஸ்னி சேனல் தொடரான ஹன்னா மாண்டானாவில் பரப்பிசை நட்சத்திரக் கதாப்பாத்திரமான மிகைலாவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. [18] டிஸ்னி சேனல் தொடர்களுக்கான சூட் லைஃப் , லிஸ்ஸி மெக்குயர் ஆகிய இரு சோதனைத் தொடர்களில் நடிக்கத் தேர்வானார். [19] [20] பின்னர், நெட்வொர்க்கின் தொடரான விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நடிப்புச் சோதனைக்கு அழைக்கப்பட்டு அலெக்ஸ் ரூசோ எனும் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தேர்வானார். [18] பின்னர் கோமசும் அவரது தாயாரும் லாஸ் ஏஞ்சல்சுக்கு குடிபெயர்ந்தனர். [21]
மனிதநேயச் செயல்பாடுகள்
[தொகு]
அக்டோபர் 2008 இல், கோமசு பெவர்லி ஹில்ஸில் செயிண்ட் சூட்சு குழந்தைகள் மருத்துவமனையின் "ரன்வே ஃபார் லைஃப்" நிகழ்ச்சியில் வடிவழகியாகப் பங்கேற்றார். அதில் $1 மில்லியனுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. [22] [23] அதே மாதத்தில், கோமஸ், யுனிசெஃப் பிரச்சாரத்திற்கான ட்ரிக்-ஆர்-ட்ரீட்டின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். இது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு உதவ ஹாலோவீனில் பணம் திரட்ட குழந்தைகளை ஊக்குவித்தது. [24] ஆகஸ்ட் 2009 இல், அப்போது 17 வயதாக இருந்த கோமசு, இளைய யுனிசெஃப் தூதரானார் ( மில்லி பாபி பிரவுன் பின்னர் இந்தச் சாதனையை முறியடித்தார்). [25] [26] தனது முதல் அதிகாரப்பூர்வ களப்பணியில், கோமசு செப்டம்பர் 2009 இல் கானாவுக்கு ஒரு வாரம் பயணம் செய்தார். சுத்தமான நீர், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகள் இல்லாத பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் மோசமான நிலைமைகளை நேரில் கண்டார்.[27][28]
சொந்த வாழ்க்கை
[தொகு]சொத்து
[தொகு]கோமசு லாஸ் ஏஞ்சல்ஸின் கலபாசஸில் $6.6 மில்லியன் மதிப்புள்ள வீட்டைச் சொந்தமாக வைத்திருந்தார்[29] 2014 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸின் டார்சானாவில் உள்ள தனது மாளிகையை $3.5 மில்லியனுக்கு விற்றார்.[30] 2015 ஆம் ஆண்டில், டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் $3.5 மில்லியனுக்கு ஒரு மாளிகையை வாங்கினார். அக்டோபர் 2018 இல் அந்த வீடு விற்கப்பட்டது.[31] 2020 ஆம் ஆண்டில்,என்சினோவில் $5 மில்லியன் மதிப்புள்ள ஒரு மாளிகைக்கு குடிபெயர்ந்தார். [32] அதே ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸின் ஸ்டுடியோ சிட்டியில் உள்ள தனது வீட்டை $2.3 மில்லியனுக்கு விற்றார். [33]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Selena Marie Gomez". American Society of Composers, Authors and Publishers. Retrieved July 23, 2024.
- ↑ "Selena Gomez Biography". The Biography Channel. Archived from the original on August 19, 2017. Retrieved April 12, 2013.
- ↑ Bonner, Mehera (May 10, 2018). "Everything You Need to Know About Selena Gomez's Mom, Mandy Teefey". Cosmopolitan. Archived from the original on May 10, 2020. Retrieved May 24, 2020.
Mandy was born in Texas, and gave birth to Selena when she was just 16. She married Selena's dad, Ricardo Joel Gomez, and after their relationship ended in divorce, married talent manager Brian Teefey.
- ↑ Barney, Chuck (February 7, 2008). "Selena Gomez could be next Disney 'it' girl". Oakland Tribune இம் மூலத்தில் இருந்து March 10, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080310021920/http://www.insidebayarea.com/ci_8194264?source=rss. "Mandy Teefey, a former stage actress, gave birth to Selena at the age of 16."
- ↑ "Selena Gomez's Famous Name". E!. August 22, 2008 இம் மூலத்தில் இருந்து December 1, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091201105844/http://www.eonline.com/videos/v31013_Selena_Gomez__Famous_Name.html.
- ↑ Roiz, Jessica Lucia (May 3, 2016). "Selena Gomez Talks Selena Quintanilla; Reveals Why She Was Named After 'Queen of Tejano'". Latin Times இம் மூலத்தில் இருந்து July 10, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160710022058/http://www.latintimes.com/selena-gomez-talks-selena-quintanilla-reveals-why-she-was-named-after-queen-tejano-383518.
- ↑ "Selena Gomez and Jake T. Austin on being latin". Showbizcafe.com. September 13, 2008. Archived from the original on April 4, 2023. Retrieved July 4, 2011.
- ↑ Curiel, Kamren (June 14, 2012). "Selena Gomez Supports Her Mom at Foster Care Fundraiser". Latina. Archived from the original on February 1, 2020.
...her mother Mandy Teefey. 'I was adopted, I was a teen mother,' Gomez's mom said.
- ↑ "TV: Life is magical for 'Wizards' star". The Fresno Bee. Archived from the original on August 8, 2008. Retrieved April 8, 2013.
Because Gomez's father is from Mexico, she has been able to attend many family quinceañeras. But the actress, whose mother is half-Italian, did not have her own.
- ↑ Exposito, Suzy (March 11, 2021). "How Selena Gomez embraced her Mexican heritage as 'a source of healing'". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து March 28, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210328124951/https://www.latimes.com/entertainment-arts/music/story/2021-03-11/selena-gomez-revelacion-spanish-language-record.
- ↑ "Selena Gomez has a message for immigrant graduates during COVID-19". Define American. May 23, 2020. Archived from the original on August 6, 2020. Retrieved May 24, 2020 – via YouTube.
- ↑ "Selena Gomez Biography". BuddyTV. Archived from the original on June 28, 2017. Retrieved October 22, 2022.
- ↑ Takeda, Allison (May 16, 2013). "Demi Lovato, Selena Gomez Will Always Be Friends". US Weekly. Archived from the original on April 7, 2023. Retrieved October 22, 2022.
- ↑ "From Texas to Hollywood!". People. July 22, 2009. Archived from the original on September 13, 2009. Retrieved June 15, 2013.
- ↑ Nessif, Bruna (July 29, 2011). "Time Warp: Spy Selena Gomez in Her First Film Role". E! News. Archived from the original on April 4, 2023. Retrieved October 22, 2022.
- ↑ 16.0 16.1 Angiolillo, Vincent; Rodriguez, Javy (March 17, 2013). "30 Things You Didn't Know About Selena Gomez". Complex. Archived from the original on October 26, 2022. Retrieved October 22, 2022.
- ↑ "A Midsummer's Nightmare". The Suite Life of Zack & Cody. Disney Channel. No. 22, season 2. 08:04, 22:04 minutes in.
- ↑ 18.0 18.1 "Selena Gomez Biography". People. Archived from the original on August 29, 2016. Retrieved October 22, 2022.
- ↑ Martin, Denise (November 3, 2004). "In search of tweens". Variety. Archived from the original on March 19, 2021. Retrieved November 4, 2022.
- ↑ Addams Rosa, Jelani (April 10, 2015). "6 Things You Never Knew About "Lizzie McGuire"". Seventeen. Archived from the original on June 26, 2022. Retrieved August 22, 2022.
- ↑ "From Texas to Hollywood!". People. July 22, 2009. Archived from the original on September 13, 2009. Retrieved June 15, 2013.
- ↑ "Stars Hit The Catwalk For St. Judes". Looktothestars.org. October 14, 2008. Archived from the original on July 14, 2022. Retrieved August 6, 2009.
- ↑ "Celeb Do-Gooders: Young Hollywood Gives Back!". E! News. August 10, 2014. Archived from the original on October 23, 2022. Retrieved March 17, 2024.
- ↑ "Selena Gomez Trick-Or-Treats For UNICEF". Looktothestars.org. October 9, 2008. Archived from the original on July 14, 2022. Retrieved August 6, 2009.
- ↑ Caulfield, Keith (November 21, 2018). "Millie Bobby Brown Has Been Announced as UNICEF's Youngest-Ever Goodwill Ambassador". TeenVogue. Archived from the original on July 14, 2022. Retrieved December 12, 2018.
- ↑ "Charity, Action, Now! (C.A.N.)". UNICEF USA. Retrieved May 6, 2020.
- ↑ "Teen Sensation Selena Gomez Appointed UNICEF Ambassador". Reuters. September 3, 2009 இம் மூலத்தில் இருந்து September 6, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090906225400/https://www.reuters.com/article/pressRelease/idUS178135%2B03-Sep-2009%2BPRN20090903.
- ↑ "Selena Gomez: Trip to Africa was 'life-changing'". GoogleNews.com. Associated Press. October 2, 2009 இம் மூலத்தில் இருந்து October 8, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091008052617/https://www.google.com/hostednews/ap/article/ALeqM5gXQVPHT2lU525QpACXyin-pm1sjAD9B37HM81.
- ↑ Torres, Alejandra (March 26, 2020). "Step inside Selena Gomez's stunning $6,6 million Calabasas Mansion". Archived from the original on January 2, 2023. Retrieved January 2, 2023.
- ↑ Beale, Lauren (October 1, 2014). "Selena Gomez sells Tarzana house she expanded, remodeled". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து September 25, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220925012759/https://www.latimes.com/business/realestate/hot-property/la-fi-hotprop-selena-gomez-20141001-story.html.
- ↑ Gilthorpe, Darla Guillen (October 11, 2018). "After two years on the market, Texas native Selena Gomez finally sells her Fort Worth mansion". Houston Chronicle இம் மூலத்தில் இருந்து March 6, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230306042951/https://www.chron.com/z-archived-homes/article/Selena-Gomez-sells-fort-worth-Texas-mansion-13299025.php.
- ↑ Davis, Dominic-Madori (November 27, 2019). "Selena Gomez just bought singer Tom Petty's Encino mansion for $5 million — here's a look inside the sprawling Encino property". Business Insider. Archived from the original on March 6, 2023. Retrieved July 22, 2023.
- ↑ David, Mark (September 29, 2020). "Inside Selena Gomez's Former Studio City Home". Dirt. Archived from the original on March 22, 2023. Retrieved January 2, 2023.