செலினியம் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செலினியம்
Seleniumlogo.png
அண்மை வெளியீடு2.44.0 / சூன் 3, 2014; 7 ஆண்டுகள் முன்னர் (2014-06-03)
மொழிஜாவா
இயக்கு முறைமைபல இயங்குதளங்களில் இயங்கும்
உருவாக்க நிலைசெயல்பாட்டில்
மென்பொருள் வகைமைவலைச் செயலிக்கான மென்பொருட் சோதனை சட்டகம்
உரிமம்அப்பாச்சி அனுமதி 2.0
இணையத்தளம்seleniumhq.org

செலினியம் என்பது பல இயங்குதளங்களில் இயங்கக்கூடிய மென்பொருள் கட்டமைப்பாகும். இது வலைச் செயலிகளை சோதிப்பதற்கு உதவும்.[1] இதை ஜாவா, சி சார்ப், பெர்ள், பி.எச்.பி, பைத்தான், ரூபி உள்ளிட்ட நிரலாக்க மொழிகளின் மூலம் இயக்க முடியும். இந்தக் கட்டமைப்பிற்கு ஏற்றவாறு சோதனை நிரல்களை எழுதி, வலைச் செயலிகளின் செயல்பாட்டை சோதிக்கலாம். இந்த சோதனை நிரல்களை பெரும்பாலான உலாவிகளில் இயக்க முடியும். இது திறந்த மூல மென்பொருள் என்பது குறிப்பிடக்கத்தக்கது. இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். அப்பாச்சி அனுமதியின் 2.0 பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான செருகல்கள் எக்லிப்ஸ் உள்ளிட்ட மென்பொருட்களில் கிடைக்கின்றன.

பாகங்கள்[தொகு]

  • செலினியம் ஐ.டி.ஈ: சோதனை நிரல்களை உருவாக்கி, திருத்தி, மேம்படுத்துவதற்கான வசதிகளைக் கொண்டது.
  • செலினியம் வெப்டிரைவர் : சோதனை நிரல்களை உலாவிகளில் செயல்படுத்துவதற்கு உதவும். ஒவ்வொரு உலாவிக்கும் தனித்தனி வெப்டிரைவர் உள்ளது. அதில் உலாவியை இயக்குவதற்கான கட்டளைகள் இருக்கும்.

செயல்பாடு[தொகு]

சோதனை நிரல்களை மேற்குறிப்பிட்ட நிரலாக்க மொழிகளில் எழுதி, வலைச் செயலிகளை சோதிக்க முடியும். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் தானியக்கமாக வெவ்வேறு தகவல்களை எழுதி பக்கத்தை சேமிக்கும்படி செய்ய முடியும். இதன் மூலம் வலைப் பக்கத்தின் திறனையும், அதில் உள்ள குறைகளையும் கண்டறிய முடியும்.

சான்றுகள்[தொகு]

  1. "Selenium Commands – "Selenese"". Selenium Documentation. September 9, 2011 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]