செலினா ஹொசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலினா ஹொசைன்
সেলিনা হোসেন
செலினா ஹொசைன் - 2014 இல்
வங்காள அகாதமியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 3, 2022
முன்னையவர்ரஃபிகுல் இஸ்லாம்
வங்காளதேச ஷிஷு அகாதமி தலைவர்
பதவியில்
ஏப்ரல் 23, 2014 – 2018
முன்னையவர்ஷேக் அப்துல் அஹெட்[1]
பின்னவர்லக்கி இனம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1947 (1947-06-14) (அகவை 76)
ராஜசாகி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்பங்களாதேஷி
கல்விஎம்.ஏ.
முன்னாள் கல்லூரிராஜ்சாகி பல்கலைக்கழகம்
வேலைநாவலாசிரியர், நிர்வாகி
விருதுகள்full list

செலினா ஹொசைன் ( Selina Hossain ) (பிறப்பு 14 ஜூன் 1947) வங்காளதேசத்தைச் சேர்ந்த புதின ஆசிரியராவார். பிப்ரவரி 2022 முதல் பங்களா அகாதமியின் தற்போதைய தலைவராக இருக்கிறார். [2] [3] [4] ஹாங்கோர் நொடி கிரெனேட் (1976) மற்றும் போகா மகோரர் கோர் போஷோடி (1996) ஆகியவை இவரது முக்கிய படைப்புகள் ஆகும். 1980 இல் பங்களா அகாதமி இலக்கிய விருது, 2009 இல் எகுஷே பதக் மற்றும் 2018 இல் சுதந்திர தின விருது போன்ற அனைத்து முக்கிய தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது புதினங்கள் மற்றும் சிறுகதைகள் ஆங்கிலம், உருசியன், பிரெஞ்சு, ஜப்பானியம், கொரியன், பின்னிஷ் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [5] இவர் 2014 முதல் 2018 [6] வரை பங்களாதேஷ் ஷிஷு அகாதமியின் தலைவராக பணியாற்றினார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஹொசைன் ஏ.கே. மோஷாரஃப் ஹொசைன் மற்றும் மரியமெனெசா பாகுல் ஆகியோருக்கு பிறந்தார். [7] இவர், 1968 இல் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் பெங்காலி மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

1994-95 இல், செலினா ஹொசைன் தனது சந்தியா காயத்ரி நாவலுக்காக ஃபோர்டு அறக்கட்டளையின் உதவித்தொகையைப் பெற்றார். [8]

இவர், பங்களா அகாதமியின் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார். இவர் பங்களாதேஷின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும், யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். [9] 2014 இல், இவர் பங்களாதேஷ் ஷிஷு அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

செலினா ஹொசைனின் பூமி ஓ குசும் என்ற நாவல் வங்காள இலக்கியத்தில் என்கிளேவ் பிரச்சினையைத் தீர்க்கும் முதல் படைப்பாகும்.

பணிகள் (வேலை)[தொகு]

நாவல்கள்[தொகு]

  1. ஜோஸ்னே ஷுர்ஜோ ஜலா (1973)
  2. ஜோலோச்சாஸ் (1972)
  3. ஹாங்கோர் நோடி கிரெனேட் (1976)
  4. மேக்னா சைதன்யே ஷிஸ் (1979)
  5. ஜபிடோ ஜிபோன் (1981) [10]
  6. போடோஷோப்டோ (1982)
  7. நீல் மோயுரர் ஜூபன் (1983)
  8. சாந்த் பெனே (1984)
  9. போகா மகோரர் கோர் போசோடி (1986) [3]
  10. நிரோண்டோர் கோண்டதோனி (1987)
  11. க்ஷரன் (1988)
  12. கட்டடரே ப்ரோஜபோதி (1989)
  13. குன் ஓ பலோபாஷா (1990)
  14. கல்கேது மற்றும் புல்லோரா (1992)
  15. பாலோபாஷா பிரிதிலோடா (1992)
  16. தனபோரென் (1994)
  17. கயீத்ரீ ஷோந்தா (1996)
  18. டிபன்னிதா (1997)
  19. ஜோத்தா (1998)
  20. கக்தருவா (1999)
  21. லாரா (2000)
  22. கத்கோய்லர் சோபி (2001)
  23. மோஹினிர் பியே (2002)
  24. அனோபிக் அந்தர் (2003)
  25. கும்கடுரே ஈஸ்வர் (2004)
  26. மோர்கர் நீல்பாகி (2005)
  27. ஒபெக்கா (2007)
  28. டீனர் ரோஷிட் கிட்டு (2007)
  29. மதி ஓ ஷோஷர் புனான் (2007)
  30. பூர்ணோ சோபிர் மோக்னோடா (2008) [10]
  31. பூமி ஓ குசும் (2010)
  32. ஜோமுனா நோதிர் முஷைரா (2011)
  33. கச்திர் சாயா நை (2012)
  34. ஷோனாலி டுமூர் (2012)
  35. ஆகஸ்ட்-எர் அக் ராத் (2013)
  36. கெரில்லா ஓ பீரங்கோனா (2014)
  37. திங்கலர் கத்கோர் (2015)

கதைகள்[தொகு]

  • உட்சோ தேகே நிரோண்டோர் (1969)
  • ஜோலோபோட்டி மேகர் பதாஷ் (1975)
  • கோல் கொரோடல் (1982)
  • போரோஜோன்மோ (1986)
  • மனுஷ்டி (1993)
  • மோதிஜனர் மேயேரா (1995)
  • ஒனுரா பூர்ணிமா (2008)
  • சொக்கினார் சோந்திரகோலா (2008)
  • ஏகலேர் பந்தபுரி (2008)
  • ஒபேலர் டின்கான் (2009)
  • நாரிர் ரூப்கோதா (2009)
  • நுன்பந்தர் கோரகோரி (2014)
  • மிருத்யூர் நில்பத்மா (2015)

விருதுகள்[தொகு]

சார்க் (SAARC) இலக்கிய விருது - 2015 இன் சீதாகாந்த மகாபத்ரா, சுமன் பொக்ரேல் மற்றும் பிற பெறுநர்களுடன் செலினா ஹொசைன்
  • டாக்டர். முஹம்மது இனாமுல் ஹக் தங்கப் பதக்கம் (1969)
  • பங்களா அகாதமி இலக்கிய விருது (1980)
  • அலோல் இலக்கிய விருது (1981) [11]
  • கமர் முஷ்டாரி நினைவு பரிசு (1987)
  • பிலிப்ஸ் இலக்கியப் பரிசு (1994)
  • அலக்தா இலக்கிய விருது (1994)
  • சாகித்ய அகாதமியின் பிரேம்சந்த் பெல்லோஷிப் [12]
  • எகுஷே பதக் (2009)
  • ஐஐபிஎம் வழங்கும் ரவீந்திர ஸ்மிருதி புரஸ்கார். புது டெல்லி (2010)
  • சந்திரபதி அகாதமி தங்கப் பதக்கம் (2010)
  • ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இருந்து (2010) இலக்கியத்திற்கான சர்வதேச விருது (ஹானரிஸ் காசா)
  • ஐஐபிஎம் புது டெல்லியின் சுர்மா சௌத்ரி நினைவு விருது (2011)
  • சார்க் இலக்கிய விருது (2015) [13]
  • சுதந்திர தின விருது (2018)

சான்றுகள்[தொகு]

  1. "Selina Hossain named Shishu Academy Chairperson". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  2. বিখ্যাত ব্যক্তিত্ব (in Bengali). Bangladesh National Web Portal. Archived from the original on 2017-05-27. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.
  3. 3.0 3.1 "Selina Hossain". The Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
  4. "Author Selina Hossain is appointed president of Bangla Academy". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  5. "Selina Hossain" (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  6. চেয়ারম্যান : সেলিনা হোসেন [Chairman : Selina Hossain] (in Bengali). Bangladesh Shishu Academy. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  7. বিখ্যাত ব্যক্তিত্ব (in Bengali). Bangladesh National Web Portal. Archived from the original on 2017-05-27. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.বিখ্যাত ব্যক্তিত্ব (in Bengali).
  8. "Selina Hossain" (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08."Selina Hossain".
  9. "Selina Hossain" (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08."Selina Hossain".
  10. 10.0 10.1 "In conversation with Selina Hossain" (in en). The Daily Star. 2015-12-05. http://www.thedailystar.net/in-focus/conversation-selina-hossain-182329. 
  11. "Selina Hossain" (in ஆங்கிலம்). United Nations Educational, Scientific and Cultural Organization. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08."Selina Hossain".
  12. "Premchand Fellowship Winners" (in ஆங்கிலம்). Sahitya Akademi of India. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  13. "Selina Hossain wins Saarc Lit Award" (in en). http://www.thedailystar.net/selina-hossain-wins-saarc-lit-award-64230. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலினா_ஹொசைன்&oldid=3684919" இலிருந்து மீள்விக்கப்பட்டது