செலஸ்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செலஸ்டியா (Celestia) என்பது கிறிஸ் லாரல் என்பவரால் உருவாக்கப்பட்ட முப்பரிமாண வானியல் செய் நிரலாகும் . இது பயனர்களை தோற்ற மெய்ம்மை மூலமாக பிரபஞ்சத்தில் பயணிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. ஓப்பன் ஜிஎல்லைப் பயன்படுத்தி பொருட்களைத் தோன்றச் செய்கிறது. [note 1]

 இது குனு பொது பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் ஆகும். இது அமிகா ஓஎஸ்4,லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு, ஐஓஎஸ், [1] மற்றும் ஆண்ட்ராய்டு [2] போன்ற தளங்களில் கிடைக்கிறது.

செலஸ்டியாவின் பதிப்புகளை மேம்படுத்துவது 2013 இல் நிறுத்தப்பட்டது. 2011 இல் இதன் இறுதி பதிப்பு வெளியிடப்பட்டது. [3] இதன் மேம்பாட்டுக் குழுவினர் Celestia.sci எனும் [4] அண்டவியல் காட்சிப்படுத்தல் வேலையில் ஈடுபட்டனர். 2016 இன் பிற்பகுதியில், மீண்டும் இதனை மேம்படுத்தும் பணிகள் தொடங்கின.[5][6] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, பதிப்பு 1.7.0 இன் பீட்டா சோதனை உருவாக்கங்கள் கிடைக்கின்றன, [7] மேலும் இதன் வழுகளைக் களைந்து 1.6.2. எனும் பதிப்பு வெளியிடப்பட்டது. [8]

இதனை கட்டற்ற மென்பொருள் வலைத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்ய இயலும் . 2001 மற்றும் மே 2017 க்கு இடையில், முன்னாள் மத்திய விநியோக தளமான சோர்சு ஃபோர்கி இந்த மென்பொருள் சுமார் 12 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறியது. [9]

செயல்பாடுகள்[தொகு]

செலஸ்டியாவில் வழக்கமான டி.எஸ்.ஓ கணக்கெடுப்பு

செலஸ்டியா 118,322 நட்சத்திரங்களின் ஐரோப்பிய விண்மீனாய்வுச் செயற்கைக் கோள் பட்டியலையும் காட்டுகிறது. கதிரவ மறைப்பு ,நிலவு மறைப்பு ,சுற்று வட்டப் பாதைகள் ,கோள் (உள்ளிட்ட புறக்கோள் ,) குறுங்கோள், இயற்கைத் துணைக்கோள், சிறுகோள், வால்வெள்ளி, செயற்கைக்கோள்கள், மற்றும் விண்கலம் . போன்றவற்றைக் காட்ட செலஸ்டியா VSOP87 எனும் கோட்பாட்டினைப் பயன்படுத்துகிறது.குறிப்புகள்[தொகு]

  1. There are three graphical front-ends available: GLUT, GTK+ or Qt.

சான்றுகள்[தொகு]

  1. Markerz (20 February 2020). "Mobile Celestia for iOS - Celestia Forums".
  2. Markerz (21 March 2020). "Mobile Celestia for Android - Celestia Forums".
  3. "Celestia: News" (10 June 2011).
  4. "celestia.sci sources" (2014-04-10). மூல முகவரியிலிருந்து 2019-12-08 அன்று பரணிடப்பட்டது. "Celestia (the development of which has stopped)"
  5. "Welcome to restored Celestia Forums - Announcements - Celestia Forums" (en-gb).
  6. "Celestia 1.7.0 Development Thread - Celestia Forums".
  7. "Celestia builds on Bintray".
  8. "New bugfix release 1.6.2-beta1 - Celestia Forums".
  9. "Download Statistics: All Files" (27 May 2017).
பிழை காட்டு: <ref> tag with name "celestia-sourceforge" defined in <references> is not used in prior text.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலஸ்டியா&oldid=3246241" இருந்து மீள்விக்கப்பட்டது