உள்ளடக்கத்துக்குச் செல்

செறிவூட்டப்பட்ட அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செறிவூட்டப்பட்ட அரிசி (Artificial rice (Or) Fortified rice), என்பது உணவுக் குறைநிரப்பியாகச் செயல்படுகிறது. அரிசி குருணை அல்லது சோள மாவு அல்லது தானிய மாவுகளில் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்பட்டு, மீண்டும் அரிசி வடிவத்திற்கு மாற்றப்பட்டதாகும். 1 கிலோ சாதாரண அரிசியில் 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்க, குறிப்பாக இரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்க இது உதவுகிறது. இந்தச் செயற்கை ஊட்டமேற்றம் நடவடிக்கையானது உலக சுகாதார அமைப்பு, உணவு பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தப்படுகிறது.[1][2]

செய்முறை

[தொகு]

சாதாரண அரிசியை அரைத்து, அதனுடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கலக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அரிசி வடிவம் கொடுக்கப்படுகிறது.

நோக்கம்

[தொகு]

பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் மூலம் ஏழைமக்கள் மற்றும் மாணவர்களின் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

விமர்சனங்கள்

[தொகு]

செறிவூட்டப்பட்ட அரிசியால் ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும், சில பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அறிஞர்கள் விமர்சிக்கின்றனர்[3].

வழங்கல்

[தொகு]

1 ஏப்ரல் 2026 முதல், இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசு நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செறிவூட்டப்பட்ட_அரிசி&oldid=4383821" இலிருந்து மீள்விக்கப்பட்டது