செறாயி கௌரீஸ்வரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செறாயி கௌரீஸ்வரர் கோவில் (மலையாளம்: ചെറായി ഗൗരീശ്വര ക്ഷേത്രം) தென் இந்தியாவில் கேரள மாநிலத்தில் காணப்படும் ஒரு மிகவும் முக்கியமான இந்துக் கோவிலாகும். கேரளத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள செறாயி என்ற கிராமத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை விஞ்ஞான வர்த்தினி சபை (வி.வி.சபை) என்ற அமைப்பு பரிபாலித்து வருகிறது. இந்தக் கோவில் மலையாள பழனி அல்லது முருகன் கோவில் என்றும் பரவலாக அறியப்படுகிறது. செறாயி கௌரீஸ்வரர் கோவில் திருவிழா எர்ணாகுளம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் மிகப் பெரிய உற்சவமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழா ஜனவரி மாதத்தின் கடைசி இரு வாரங்கள் அல்லது பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடைபெறும். இந்தத் திருவிழாவின் முக்கியமான அம்சம் அலங்காரம் செய்யப்பட யானைகளின் சீவேலி என்று அழைக்கப்படும் கோவிலைச் சுற்றிய ஊர்வல யாத்திரையாகும், அவற்றில் 20 முதல் 40 யானைகளின் அணிவகுப்பு மற்றும் மேள தாளத்துக்கு ஏற்ற யானைகளின் செயல்பாடு மனத்தைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும்.

செறாயியில் இன்னுமொரு பிரபலமான கோவிலும் உள்ளது. இது அழீக்கல் ஸ்ரீ வராகர் கோவில் ஆகும். இக்கோவிலில் அமைந்துள்ள அழகான தேர் மிகவும் பிரபலமானதாகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]