செறாயி கடற்கரை
செறாயி கடற்கரை | |
|---|---|
செறாயி கடற்கரையில் சூரிய உதயம் | |
| ஆள்கூறுகள்: 10°08′32″N 76°10′42″E / 10.14227°N 76.178255°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | எர்ணாகுளம் |
| பெயர்ச்சூட்டு | செராய், வைபின் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அருகில் உள்ள நகரம் | கொச்சி |
செறாயி கடற்கரை (Cherai Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியான வைப்பீன் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள செராயில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும்.[1][2][3][4]
அமைவிடம்
[தொகு]மாநிலத்தில் அதிகம் பயணிகள் வரும் கடற்கரைகளில் ஒன்றான இது கொச்சி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. (15 மைல்) தொலைவிலும், கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[5]

கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் செறாயி கடற்கரை அமைந்துள்ளது. இது வைப்பின் தீவின் ஒரு பகுதியாகும். இது கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரை 15 கிலோமீட்டர் நீளமுடையது. இங்கு திசம்பர் மாதத்தில் கடற்கரைத் திருவிழா நடைபெறும்.
சுற்றுலா
[தொகு]இந்தக் கடற்கரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது. இதில் அலைகள் பெரும்பாலும் குறைவாகவும், அலைகள் மென்மையாகவும் இருப்பதால் நீச்சலுக்கு ஏற்றது. இங்கு அடிக்கடி ஓங்கிலைப் பார்க்க இயலும். உப்பங்கழிகளையும் கடலையும் ஒரே சட்டகத்தில் காணக்கூடிய சில இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[6] செராய் கடற்கரை கொச்சியிலிருந்து அணுகக்கூடியதாகவும் பரபரப்பற்ற, தூய்மையான கடற்கரையை விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. மேலும் இது பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்க்கிறது.
செறாயி கடற்கரையின் படங்கள்
[தொகு]- செராய் கடற்கரையின் காட்சி
- செராய் கடற்காயலின் காட்சி
- கடற்கரைக்கு அருகிலுள்ள நடைப்பாதைகளில் ஒன்று
- கடற்கரையில் பாராகிளைடிங்
- கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதி ஒன்று
- செராய் கடற்கரையில் சூரியன் மறைவு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cherai Beach in Kochi, Ernakulam | Kerala Tourism". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-07-29.
- ↑ "Cherai Beach". Incredible India (in ஆங்கிலம்). Retrieved 2026-07-29.
- ↑ "Cherai beach, Ernakulam, Kerala, India, Video". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-07-29.
- ↑ "Cherai Beach Kochi (Timings, History, Entry Fee, Images & Information) - Kerala Tourism". keralatourism.travel. Retrieved 2026-07-29.
- ↑ "Cherai Beach, Kochi". கேரளச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம். Retrieved 30 November 2017.
- ↑ "Kerala's best beaches for sun, sand and sea". Condé Nast Traveler. Archived from the original on 1 திசம்பர் 2017. Retrieved 30 November 2017.
