உள்ளடக்கத்துக்குச் செல்

செர்லீனா அப்துல் ரசீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்லீனா அப்துல் ரசீத்
Syerleena Abdul Rashid
شيرلينا عبد الرشيد
செர்லீனா அப்துல் ரசீத்
மலேசிய மக்களவை உறுப்பினர்
பதவியில்
நவம்பர் 2022  தற்போது வரையில்
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
பதவியில்
19 நவம்பர் 2022  தற்போது வரையில்
முன்னையவர்ஓங் கோன் வாய்
(பாக்காத்தான்ஜசெக)
பெரும்பான்மை42,610 (2022)
பினாங்கு மாநில சட்டமன்றம்
செரி டெலிமா தொகுதி
பதவியில்
9 மே 2018  12 ஆகத்து 2023
முன்னையவர்ஆர். எஸ். என். ராயர்
(பாக்காத்தான்ஜசெக)
பெரும்பான்மை13,211 (2018)
பதவிகள்
2015–2018பினாங்கு தீவு மாநகராட்சி
மாநகராட்சி அவை உறுப்பினர்[1][2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Syerleena binti Abdul Rashid

31 ஆகத்து 1980 (1980-08-31) (அகவை 45)
பினாங்கு  மலேசியா
தேசியம்மலேசியர்
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP)
(2013 தொடக்கம்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2013–2015)
பாக்காத்தான் (PH)
(2015 தொடக்கம்)
துணைவர்
தோம் ஆஸ்போர்ன் (தி. 2021)
பெற்றோர்அப்துல் ரசீத் அனாபி (தந்தை)
வாழிடம்பினாங்கு, மலேசியா
முன்னாள் மாணவர்மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி

செர்லீனா அப்துல் ரசீத் (ஆங்கிலம்; மலாய்: Syerleena Abdul Rashid‎) (பிறப்பு: 31 ஆகத்து 1980) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; நவம்பர் 2022 முதல் பினாங்கு புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் மே 2018 முதல் ஆகத்து 2023 வரை பினாங்கு செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியின் பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) 2015 முதல் 2018 வரை பினாங்கு தீவு மாநகராட்சி உறுப்பினராகவும் பணியாற்றினார்.[3][1][2]

பாக்காத்தான் அரப்பான் (PH); மற்றும் பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணிகளின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராக உள்ளார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் தி மலேசியன் இன்சைடர் நாளிதழின் கட்டுரையாளராகவும்; மற்றும் பல்வேறு ஊடக இணையச் செய்தித் தளங்களின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மலேசிய அரசு சாரா அமைப்பான அலிரான் எனும் இனச் சீர்திருத்த இயக்கத்தின் உறுப்பினராகவும், மனித கடத்தல் எதிர்ப்பு இயக்கத்திலும் தீவிர உறுப்பினராகச் செயலாற்றி உள்ளார்.[4][5]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2013-இல் ஜனநாயக செயல் கட்சியில் செர்லீனா சேர்ந்தார்.[4][6] பின்னர் அவர் பினாங்கு தீவு மாநகராட்சியின் அவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 சனவரியில் பினாங்கு மாநகராட்சியில் பதவியேற்றார்.[1] 2018-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, ஏப்ரல் 26, 2018 அன்று, பினாங்கு தீவு மாநகராட்சியின் அவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் பினாங்கு செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அவர் செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்கொண்டார். மேலும் அவரின் அரசியல் எதிரிகளால், குறிப்பாக அம்னோ (UMNO) கட்சியின் பாரிசான் நேசனல் (BN) கூட்டணி சார்ந்த தீவிர வலதுசாரிகளால் தனிப்பட்ட தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.[7][8][9] இருப்பினும் இவற்றை எல்லாம் கடந்து, 2018-ஆம் ஆண்டு செரி டெலிமா சட்டமன்றத் தேர்தலில் 13,211 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[10]

கொலை மிரட்டல்

[தொகு]

தேர்தலுக்குப் பிறகும் அரசியல் தீவிரவாதிகளின் துன்புறுத்தல்களைச் செர்லீனா தொடர்ந்து எதிர்கொண்டார். சூலை 2018-இல், இசுலாமிய அமைப்புகளைப் பலவீனப்படுத்தி, கிறித்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றுவதற்கு செர்லீனா முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டார்; அத்துடன் இரண்டு அவதூறுச் செய்திகளுடன் அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது.

இருப்பினும் அவற்றை எல்லாம் கடந்து, தற்போது மலேசியர்களின் மத்தியில் நன்கு அறிமுகமான சமூகச் சீர்திருத்தவாதியாகப் பயணித்து வருகிறார். [11] அரசியல் செயல்பாடுகளுக்கும் மேலதிகமாக, இவர் பல்வேறு இணையச் செய்தித் தளங்களில் விரிவான அளவில் பங்களித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]
2018-ஆம் ஆண்டில் பினாங்கு செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியில் செர்லீனா
2018-ஆம் ஆண்டில் பினாங்கு செரி டெலிமா சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை

மலேசிய 2022-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பினாங்கு புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதியில் செர்லீனா போட்டியிட்டார். அவர் 42,610 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 78.98% வாக்குகளைப் பெற்ற அவரின் வெற்றி அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைகிறது.

பினாங்கு அரசியல்

[தொகு]

செர்லீனா 2013-ஆம் ஆண்டு முறையாக ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார். தற்போது ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு மாநில உதவி விளம்பரச் செயலாளராகவும்; ஜசெக வனிதா அமைப்பின் (கட்சியின் தேசிய மகளிர் பிரிவு) தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

2017-ஆம் ஆண்டு பல இணையச் செய்தித் தளங்களில் வெளியிடப்பட்ட முதலில் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள், நாட்டின் மற்றவர்களைத் தனியாக விட்டுவிடுங்கள் என்ற செய்தி அறிக்கைக்காக, செர்லினா மீது மலேசிய உத்தாரா பல்கலைக்கழக விரிவுரையாளர் கமருல் சமான் யூசோப் அவதூறு வழக்கு தொடுத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

செர்லினா, பினாங்கில் உள்ள மலேசிய அறிவியல்பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியில் வரைபட வடிவமைப்பு பட்டதாரி ஆவார். அதற்கு முன்பு அவர் தன் தொடக்க கல்வி; மற்றும் இடைநிலைக் கல்வியை கிரீன் லேன் கான்வென்ட் பள்ளியில் பெற்றார்.[6]

பெப்ரவரி 2021-இல், தோம் ஆஸ்போர் எனும் தன் நீண்ட கால நண்பரை செர்லினா மணந்தார்.[12] உள்ளூர் இசைக்குழுவான பிரிவயத் குழுவில் செர்லினா ஒரு கித்தார் இசைக் கலைஞர்; மற்றும் பாடல் ஆசிரியரும் ஆவார்.[13]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசிய மக்களவை
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி வாக்குகள் % பதிவான
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2022 P048 புக்கிட் பெண்டேரா செர்லீனா அப்துல் ரசீத் (ஜசெக) 49,353 78.98% இங் சி வெய் (கெராக்கான்) 6,743 10.79% 63,404 42,610 69.00%
ரிச்சி குவான் (அன்புக் கட்சி) 5,417 8.67%
தே இ சியூ (மக்கள் கட்சி) 677 1.08%
ரசாலி முகமட் சின் (சுயேச்சை) 299 0.48%
பினாங்கு மாநில சட்டமன்றம்[14][15][16]
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி வாக்குகள் % பதிவான
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2018 N32 செரி டெலிமா செர்லீனா அப்துல் ரசீத் (ஜசெக) 16,553 82.50% கூ கே தியோங் (மசீச) 3,342 16.70% 20,285 13,211 80.40%
தான் யாங் யுங் (மஐக) 159 0.80%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Two top guns to remain at helm - Focus | The Star Online". www.thestar.com.my. Retrieved 2018-06-16.
  2. 1 2 3 "Seven councillors quit to contest in GE14 - Nation | The Star Online". www.thestar.com.my. Retrieved 2018-06-16.
  3. "DAP's Syerleena Rashid to replace Rayer in Penang" (in en-US). Free Malaysia Today. 2018-04-21. http://www.freemalaysiatoday.com/category/nation/2018/04/21/daps-syerleena-rashid-to-replace-rayer-in-penang/.
  4. 1 2 "They dare to join DAP (Part 3)" (in en-US). The Rocket. 2014-09-10. https://www.therocket.com.my/en/they-dare-to-join-dap-part-3/.
  5. "It's time we decide the country we want - Aliran" (in en-GB). Aliran. 2015-03-05. https://aliran.com/web-specials/2015-web-specials/its-time-we-decide-the-country-we-want/.
  6. 1 2 "How Reformasi shaped the destiny of a teenager | The Malaysian Insight". www.themalaysianinsight.com (in ஆங்கிலம்). Retrieved 2018-06-16.
  7. "'Christian state' claims mar Syerleena's Seri Delima campaign" (in en-GB). Malaysiakini. 2018-04-27. https://www.malaysiakini.com/news/421893.
  8. "DAP candidates say victims of fake news, lodge police reports" (in en-GB). Malaysiakini. 2018-05-03. https://www.malaysiakini.com/news/422828.
  9. "Syerleena will not be cowed by threats". www.thesundaily.my (in ஆங்கிலம்). Retrieved 2018-06-16.
  10. "undi.info - Seri Delima (P51-N32) | Malaysiakini". undi.info - Seri Delima (P51-N32) (in ஆங்கிலம்). Retrieved 2018-06-16.
  11. Loone, Susan (2018-07-11). "'Death awaits you' – Threat shocks DAP rep". Malaysiakini (in ஆங்கிலம்). Retrieved 2018-07-11.
  12. Hilmy, Imran (1 March 2021). "DAP's Seri Delima rep ties the knot in simple ceremony" (in en). The Star. https://www.thestar.com.my/news/nation/2021/02/28/dap039s-seri-delima-rep-ties-the-knot-in-simple-ceremony.
  13. Vengadesan, Martin (17 October 2020). "DAP’s Zairil and Syerleena rock out with Priwayat". Malaysiakini. https://www.malaysiakini.com/news/546902.
  14. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election
  15. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14" (in Malay). Election Commission of Malaysia. Retrieved 17 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Percentage figures based on total turnout.
  16. "The Star Online GE14". The Star (Malaysia). Retrieved 24 May 2018. Percentage figures based on total turnout.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்லீனா_அப்துல்_ரசீத்&oldid=4449376" இலிருந்து மீள்விக்கப்பட்டது