செர்ரி குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்ரி குன்று (செர்ரி ஃகில்)
Cherry Hill, New Jersey
ஊராட்சி
செர்ரி குன்று ஊராட்சிl
குறிக்கோளுரை: You couldn't pick a better place[1]
Census Bureau map of Cherry Hill, New Jersey.
Census Bureau map of Cherry Hill, New Jersey.
Countryஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நியூ செர்சி
CountyCamden
Incorporatedபிப்பிரவரி 28, 1844, டெலாவேரின் ஊராட்சி
Renamedநவம்பர் 7, 1961, செர்ரி குன்று ஊராட்சி
அரசு
 • வகைFaulkner Act Mayor-Council
 • MayorChuck Cahn (D)[2]
பரப்பளவு[3]
 • மொத்தம்24.244 sq mi (62.792 km2)
 • நிலம்24.097 sq mi (62.410 km2)
 • நீர்0.147 sq mi (0.382 km2)  0.61%
ஏற்றம்[4]82 ft (25 m)
மக்கள்தொகை (2010 Census)[5][6] [7]
 • மொத்தம்71,045
 • அடர்த்தி2,900/sq mi (1,100/km2)
நேர வலயம்Eastern (EST) (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
ZIP codes08002, 08003, 08034[8]
தொலைபேசி குறியீடு856
FIPS34-12280[9][10]
GNIS feature ID0882155[11]
இணையதளம்http://www.cherryhill-nj.com

செர்ரி குன்றம் (செர்ரி ஃகில், Cherry Hill ) என்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ செர்சி மாநிலத்தில் உள்ள கேம்டென் மாவட்டத்தில் (கவுண்டியின்) உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று. 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 71,405 என்று காட்டுகிறது. பழங்காலத்தில் செர்ரி குன்றில் இலெனாப்பி (Lenape) என்ற பழங்குடி அமெரிக்கர்கள் குடியிருந்தார்கள். குவேக்கர்கள் என்னும் மதம்சார் குழுமத்தினர் வரவுடன் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு குடிநுழைவு தொடங்கியது. இலெனாப்பி இந்தியர்கள் மற்றும் குடியேறிகள் இந்தப் பகுதியில் சுமுகமாகவே வாழ்ந்து வந்தார்கள்.

"செர்ரி குன்றம்" என்ற பெயர், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆபிரகாம் பிரவுனிங்கு (Abraham Browning) என்பவருக்கு சொந்தமான பண்ணையின் பெயராகும். இங்கு நில அபிவிருத்தி செய்த யூச்சியின் மோரி (Eugene Mori), பல பகுதிகளுக்கு "செர்ரி குன்றம்" என்று கொடுக்க, இந்தப் பெயர் பிரபலம் அடைந்தது. மேலும் வளர்ந்து, சிறுநகரமாகி விட்ட நிலையில், இறுதியாக 'செர்ரி குன்றம்" (செர்ரி ஃகில்) என்ற பெயரே தேர்ந்தெடுக்கப்பட்டது.

செர்ரி குன்றம் பத்தொன்பது பொதுப்பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் குழந்தை மையங்கள், ஆரம்ப பள்ளிகள் (12), இடைநிலை பள்ளிகள் (3), இரண்டு உயர்நிலை பள்ளிகள் (2), மற்றும் ஒரு மாற்று உயர்நிலை பள்ளியும் உட்படும். செர்ரி குன்றில் உள்ள நூலகம் நியூ செர்சியில் மிகப் பெரிய நகராட்சி நூலகங்களில் ஒன்றாகும். செர்ரி குன்றில் 51 பொது பூங்காக்களும், கேம்டென் மாவட்டத்துக்கு (கவுண்டிக்கு) சொந்தமான மூன்று பூங்காக்களும் இருக்கிறன. மிகுந்த முன்னேற்றத்திலும், இசுபிரிங்குடேல் பண்ணை (Springdale farms) மட்டும் செர்ரி குன்றத்தின் பாரம்பரியப் பெருமை காட்ட இன்னமும் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கீழைப் பகுதியிலேயே முதன்முதலாகச் சுற்றடைப்புடன் கட்டப்பட்ட "செர்ரி குன்ற பண்கடைக் கட்டிடம்" (Cherry Hill Mall) இன்றும் பல நகரத்தவரும் விருப்புடன் குழுமும் பேரங்காடியாகக் கண்ணைக் கவர்கிறது. இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற செர்ரிக் குன்றம், 2006 இல் மணி இதழ் (Money magazine) கணக்கெடுப்பின் வழியாக அமெரிக்காவின் மிகச்சிறந்த வசிக்குமிடங்களில் ஒன்றாகவோ, மிகப் பாதுகாப்பான நகர்ங்களில் எட்டாம் இடத்தைப் பெற்றதிலோ என்ன வியப்பு?

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. Staff. "Metropolitan Area News in Brief", The Philadelphia Inquirer, October 25, 2005. Accessed January 9, 2012. "Cherry Hill has a new logo A modern, cherry graphic and the tag line "You couldn't pick a better place" will be the new symbol of Cherry Hill. The logo, part of a new branding campaign, was to be unveiled at last night's Township Council meeting."
 2. "About Mayor Cahn". Cherry Hill Township website. January 2, 2012. Archived from the original on டிசம்பர் 16, 2011. பார்க்கப்பட்ட நாள் January 8, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. Gazetteer of New Jersey Places, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 9, 2012.
 4. U.S. Geological Survey Geographic Names Information System: Township of Cherry Hill, Geographic Names Information System, accessed April 12, 2007.
 5. DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Cherry Hill township, Camden County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 9, 2012.
 6. 2011 Apportionment Redistricting: Municipalities sorted alphabetically, New Jersey Department of State, p. 2. Accessed June 28, 2011.
 7. Table DP-1. Profile of General Demographic Characteristics: 2010 for Cherry Hill township, Camden County, New Jersey பரணிடப்பட்டது 2014-08-22 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed January 9, 2012.
 8. Look Up a ZIP Code for Cherry Hill, NJ, United States Postal Service. Accessed January 9, 2012.
 9. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
 10. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed July 14, 2008.
 11. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்ரி_குன்று&oldid=3555700" இலிருந்து மீள்விக்கப்பட்டது