செர்மானைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செர்மானைட்
Germanite.jpg
செர்மானைட், சுமெப் சுரங்கம், ஓசிக்கோடோ பகுதி, நமீபியாவில் கிடைக்கிறது.மாதிரியின் அளவு 5 செ.மீ
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCu26Ge4Fe4S32[1]
இனங்காணல்
நிறம்சிவந்த சாம்பல்நிறம் அடர் பழுப்பாக நிறம் மாறுகிறது
படிக இயல்புவழக்கமாக திண்ணியது அரிதாக நுண் கனசதுர படிகங்கள்
படிக அமைப்புசமவளவு ஆறு நான்முகம் H-M குறியீடு (43m)
பிளப்புஇல்லை
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்அடர் சாம்பலும் கருப்பும் கலந்தது
ஒளிஊடுருவும் தன்மைஒளிவிடாது
ஒப்படர்த்தி4.4 to 4.6
பிற சிறப்பியல்புகள்அலகு தரவு: a = 10.585 Å Z = 1[2]
மேற்கோள்கள்[3][4]

செர்மானைட் (Germanite) என்பது Cu26Fe4Ge4S32. என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய அரிய கனிமமாகும். இதுவொரு தாமிரம் இரும்பு செர்மானியம் சல்பைடு வகை கனிமமாகும். 1922 ஆம் ஆண்டு இது முதன்முதலில் கண்டறியப்பட்டது. பகுதிப்பொருட்களில் செர்மானியத்தின் இருப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதால் இதற்கு செர்மானைட் என்று பெயரிடப்பட்டது[2]. முக்கியமான குறை கடத்தி தனிமமான செர்மானியத்தைத் தயாரிப்பதற்கு தேவையான ஒரே ஆதாரம் செர்மானைட் என்பது குறிப்பிடத்தக்கது[5]. துத்தநாகத்தின் சல்பைடு கனிமமான இசுபேலரைட் வேதிச்செயன்முறையில் இக்கனிமம் வருவிக்கப்படுகிறது. காலியம், துத்தநாகம், மாலிப்டினம், ஆர்செனிக், மற்றும் வனேடியம் போன்றவை செர்மானைட்டுடன் மாசுக்களாகக் கலந்துள்ளன[2].

நமீபியா நாட்டிலுள்ள சுமெப் சுரங்கத்தில் இக்கனிமவகை காணப்படுகிறது. அங்கு இது வெப்பநீர் பல்லுலோக கனிமூலப் படிவுகளில் உள்ள ரெனியரைட், பைரைட், டெனண்டைட், இனார்கைட், கலீனா, இசுபேலரைட், டைசெனைட், பார்னைட் மற்றும் சால்கோபைரைட் போன்ற கனிமூலங்களுடன் இணைந்துள்ள டோலமைட் கற்களில் செர்மானைட் காணப்படுகிறது. அர்கெந்தீனா, அர்மீனியா, பல்கேரியா, கியூபா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு , பின்லாந்து , பிரான்சு, கிரீசு, ஜப்பான் , உருசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் செர்மானைட் கனிமூலம் காணப்படுகிறது[2]

எக்ஸ்கதிர் துகள் ஒளிக்கதிர்ச்சிதைவு[6]
தள இடைவெளி 3.05 2.65 1.87 1.60 1.32 1.21 1.08 1.02
சார்பு செறிவு 10 1 7 4 1 2 2 1

மேற்கோள்கள்[தொகு]

  1. American Mineralogist (1984) 69:943-947
  2. 2.0 2.1 2.2 2.3 http://www.mindat.org/min-1681.html Mindat.org
  3. http://webmineral.com/data/Germanite.shtml Webmineral
  4. http://rruff.geo.arizona.edu/doclib/hom/germanite.pdf Handbook of Mineralogy
  5. U.S. Geological Survey (2008), "Germanium—Statistics and Information", U.S. Geological Survey, Mineral Commodity Summaries http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/germanium/
  6. Dana's New Mineralogy, 8th edition, Gaines et al., Wiley


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்மானைட்&oldid=2919109" இருந்து மீள்விக்கப்பட்டது